நில முறைகேடு: சர்வேயர் ‛சஸ்பெண்ட் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நில முறைகேடு: சர்வேயர் ‛'சஸ்பெண்ட் '

Added : அக் 04, 2021
Share
தேனி : தேனி தேவதானப்பட்டி சர்வேயர் சக்திவேல் முறைகேடாக உறவினருக்கு பட்டா வழங்கியது சப்-கலெக்டர் விசாரணையில் தெரியவந்ததால் கலெக்டர் பரிந்துரையில் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.பெரியகுளம் தாலுகா வடவீரநாயக்கன்பட்டியில் தேனி கலெக்டர் குடியிருப்பு, பெருந்திட்ட வளாகம், ஆயுதப்படை மைதானம் உள்ளது. இங்கு 100 ஏக்கர் அரசு நிலங்களாக உள்ளன. இதில் முறைகேடாக தனியாருக்கு

தேனி : தேனி தேவதானப்பட்டி சர்வேயர் சக்திவேல் முறைகேடாக உறவினருக்கு பட்டா வழங்கியது சப்-கலெக்டர் விசாரணையில் தெரியவந்ததால் கலெக்டர் பரிந்துரையில் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.

பெரியகுளம் தாலுகா வடவீரநாயக்கன்பட்டியில் தேனி கலெக்டர் குடியிருப்பு, பெருந்திட்ட வளாகம், ஆயுதப்படை மைதானம் உள்ளது. இங்கு 100 ஏக்கர் அரசு நிலங்களாக உள்ளன. இதில் முறைகேடாக தனியாருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.இதுகுறித்து சப்-கலெக்டர் ரிஷப் விசாரித்தார். தேவதானப்பட்டி சர்வேயர் சக்திவேலின் உறவினர் பெயரில் முறைகேடாக பட்டா வழங்கியது தெரியவந்தது.

கலெக்டர் முரளீதரன் பரிந்துரையில் சக்திவேல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.சப்-கலெக்டர் கூறுகையில், கலெக்டர் பரிந்துரையில் முதற்கட்டமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர் விசாரணை நடக்கிறது. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது விரைவில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X