உதவி எஸ்.ஐ., தற்கொலை | Dinamalar

உதவி எஸ்.ஐ., தற்கொலை

Added : அக் 04, 2021
Share
சித்ரதுர்கா : செல்லகரேவின், நாயகனஹட்டி போலீஸ் நிலையத்தின், உதவி எஸ்.ஐ., தற்கொலை செய்து கொண்டார்.சித்ரதுர்கா செல்லகரேவின், நாயகனஹட்டி போலீஸ் நிலையத்தில் உதவி எஸ்.ஐ.,யாக பணியாற்றியவர் குரு மூர்த்தி, 50. நேற்று முன் தினம், சித்ரதுர்காவின் இந்து மஹாகணபதி ஊர்வலம் நடந்தது. இங்கு தன்னை பாதுகாப்பு பணிக்கு நியமிக்கும்படி, உயர் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்து, பணிக்கு

சித்ரதுர்கா : செல்லகரேவின், நாயகனஹட்டி போலீஸ் நிலையத்தின், உதவி எஸ்.ஐ., தற்கொலை செய்து கொண்டார்.

சித்ரதுர்கா செல்லகரேவின், நாயகனஹட்டி போலீஸ் நிலையத்தில் உதவி எஸ்.ஐ.,யாக பணியாற்றியவர் குரு மூர்த்தி, 50. நேற்று முன் தினம், சித்ரதுர்காவின் இந்து மஹாகணபதி ஊர்வலம் நடந்தது. இங்கு தன்னை பாதுகாப்பு பணிக்கு நியமிக்கும்படி, உயர் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்து, பணிக்கு செய்தார்.ஆனால் பணிக்கு ஆஜராகவில்லை. வீட்டுக்கும் வராமல் காணாமல் போனார். அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.

இந்நிலையில் தன்டினகுருபரஹட்டி கிராமம் அருகிலுள்ள மரத்தில், துாக்கிட்ட நிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டார். அங்கு அவரது பைக்கும் காணப்பட்டது.குருமூர்த்திக்கு, வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதே விஷயமாக மனைவியுடன், சண்டை நடந்துள்ளது. இதனால் மனம் வருந்திய அவர், பணிக்கும் செல்லாமல் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. சித்ரதுர்கா ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X