பொது செய்தி

தமிழ்நாடு

ஜி 9 வாழை சாகுபடி குறைகிறது; செவ்வாழை, நேந்திரன் அதிகரிப்பு

Added : அக் 04, 2021
Share
Advertisement
கம்பம் : கம்பம் பள்ளத்தாக்கில் வாழை சாகுபடியாளர்கள் ஜி 9 ரகத்திற்கு பதிலாக செவ்வாழை, நேந்திரன் ரகங்களை சாகுபடி செய்ய துவங்கியுள்ளனர்.தேனி மாவட்டத்தில் அதிக பரப்பில் வாழை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. செவ்வாழை, நேந்திரன், நாழிப்பூவன், ஜி 9, கற்பூரவல்லி, ரஸ்தாளி உள்ளிட்ட பல ரகங்கள் சாகுபடிகிறது. கொரோனா பரவலால் கடந்தாண்டு வாழை சாகுபடியாளர்கள் கடுமையாக

கம்பம் : கம்பம் பள்ளத்தாக்கில் வாழை சாகுபடியாளர்கள் ஜி 9 ரகத்திற்கு பதிலாக செவ்வாழை, நேந்திரன் ரகங்களை சாகுபடி செய்ய துவங்கியுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் அதிக பரப்பில் வாழை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. செவ்வாழை, நேந்திரன், நாழிப்பூவன், ஜி 9, கற்பூரவல்லி, ரஸ்தாளி உள்ளிட்ட பல ரகங்கள் சாகுபடிகிறது. கொரோனா பரவலால் கடந்தாண்டு வாழை சாகுபடியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.குறிப்பாக ஜி 9 ரகம் சாகுபடி செய்தவர்கள் அறுவடைக்கு ஆட்கள் வர மறுத்ததால் கடும் நஷ்டத்தை சந்தித்தனர். ஆனால் செவ்வாழை, நேந்திரன், நாழிப்பூவனுக்கு விலை கிடைத்தது.

இந்தாண்டு தற்போது செவ்வாழை கிலோவுக்கு ரூ.35-40 வரை கிடைக்கிறது. நேந்திரன், நாழிப்பூவனும் அதே விலை கிடைக்கிறது. ஆனால் ஜி 9 கிலோவுக்கு ரூ.10-15 வரை மட்டுமே கிடைக்கிறது. இது மட்டுமின்றி மீண்டும் ஊரடங்கு அச்சமும் விவசாயிகளிடம் உள்ளது. இதனால் ஜி 9 ரகத்தை சாகுபடி செய்வதை தவிர்த்துள்ளனர். மாறாக செவ்வாழை, நேந்திரனை விரும்பி சாகுபடி செய்ய துவங்கியுள்ளனர்.

தோட்டக்கலைத்துறையினர் கூறுகையில், ''வாழை சாகுபடி பரப்பு குறையவில்லை. அதிகரித்து வருகிறது. ஆனால் ஜி 9 சாகுபடி செய்தவர்கள் தற்போது செவ்வாழை, நேந்திரன் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X