பொது செய்தி

தமிழ்நாடு

மஞ்சளாறு அணை அக்.15ல் திறப்பு; 120 நாட்களாக 55 அடியாக தொடர்ந்த நீர்மட்டம்

Added : அக் 04, 2021
Share
Advertisement
தேவதானப்பட்டி : தேனிமாவட்டம் தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை நீர்மட்டம் நேற்று 120வது நாளாக 55 அடியாக தொடர்ந்தது. இதனால் அக்.15ல் இங்கிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.தேவதானப்பட்டி அருகே 57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணை உள்ளது. இதில் 55 அடி வரை மட்டும் நீர்தேக்க முடியும். மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள தலையாறு, வரட்டாறு,

தேவதானப்பட்டி : தேனிமாவட்டம் தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை நீர்மட்டம் நேற்று 120வது நாளாக 55 அடியாக தொடர்ந்தது. இதனால் அக்.15ல் இங்கிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

தேவதானப்பட்டி அருகே 57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணை உள்ளது. இதில் 55 அடி வரை மட்டும் நீர்தேக்க முடியும். மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள தலையாறு, வரட்டாறு, மூலாறு பகுதியில் பெய்யும் மழையால் அணைக்கு நீர் வரத்து இருக்கும். மழை காரணமாக ஜூன் 4ல் அணை நீர்மட்டம் 55 அடியை எட்டியது. உபரி நீர் மதகு வழியாக 14 நாட்கள் வெளியேற்றப்பட்டது. அணைக்கு தற்போது நீர்வரத்து இல்லை. நீர்பிடிப்பில் சாரல் மழை பெய்து வருகிறது.

எனினும் நேற்று 120வது நாளாக நீர்மட்டம் 55 அடியாக நீடித்தது. இது கடந்த 54 ஆண்டுகளில் முதல் முறையாகும். மேலும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சிதரும் வகையில் முதல் போக சாகுபடிக்கு அக்.15ல் மஞ்சளாறு அணையை திறக்க பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. இதன்மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மொத்தம் 5259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அன்றைய தினமே சோத்துப்பாறை அணையும் திறக்கப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X