பொது செய்தி

இந்தியா

சித்தராமையா மீண்டும் முதல்வராக கனவு; அமைச்சர் ஈஸ்வரப்பா

Added : அக் 04, 2021
Share
Advertisement
மைசூரு : ''எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மீண்டும் முதல்வராக கனவு காண்கிறார். கனவு காண்பது ஒரு பக்கம் இருக்கட்டும். முதலில் தேர்தலில் வெற்றி பெறட்டும் பார்க்கலாம்,'' என கிராம அபிவிருத்தி, பஞ்சாயத்துராஜ்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.மைசூரில் அவர் நேற்று கூறியதாவது:சித்தராமையாவும், மாநில காங்., தலைவர் சிவகுமாரும், அதிகாரத்துக்காக முட்டி மோதுகின்றனர்.

மைசூரு : ''எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மீண்டும் முதல்வராக கனவு காண்கிறார். கனவு காண்பது ஒரு பக்கம் இருக்கட்டும். முதலில் தேர்தலில் வெற்றி பெறட்டும் பார்க்கலாம்,'' என கிராம அபிவிருத்தி, பஞ்சாயத்துராஜ்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.

மைசூரில் அவர் நேற்று கூறியதாவது:சித்தராமையாவும், மாநில காங்., தலைவர் சிவகுமாரும், அதிகாரத்துக்காக முட்டி மோதுகின்றனர். காங்கிரசில் கோஷ்டி பூசல் துவங்கியுள்ளது. தேர்தலுக்கு முன்பே, இக்கட்சி இரண்டு பிரிவுகளாக பிரியும் என்பதில் சந்தேகமில்லை

.மீண்டும் முதல்வராக வேண்டும் என, சித்தராமையா கனவு காண்கிறார். கனவை ஒரு பக்கம் வைத்து விட்டு, தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என ஆலோசிக்கட்டும். முந்தைய தேர்தலில், சாமுண்டேஸ்வரி தொகுதியில் ஏன் தோற்றார் என்பதை கூறட்டும்.சித்தராமையாவுக்கு, அதிகாரத்தில் அமர்வதே குறிக்கோள். சட்டசபையில் ஜாதி கணக்கெடுப்பு அறிக்கையை பற்றி பேசவில்லை. தற்போது பிரசாரத்துக்காக இவ்விஷயத்தை பற்றி பேசுகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X