சேதமடைந்த அங்கன்வாடி மேற்கூரை; அபாயத்தில் குழந்தைகள்

Added : அக் 04, 2021
Share
Advertisement
விருதுநகர் : விருதுநகரில் மேற்கூரை சேதமடைந்த அங்கன்வாடி மையத்தால் குழந்தைகள் உணவருந்த திண்டாடும் நிலை உள்ளது. விபத்து அபாயத்தை நீக்கி உடனடியாக மேற்கூரையை சீரமைக்க வேண்டும். விருதுநகர் தந்திமரத்தெருவில் செந்திக்குமார மீனாட்சி அம்மாள் நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இதன் வளாகத்தில் அப்பகுதிக்கான அங்கன்வாடி மையம் உள்ளது. ஐந்து மாதங்கள் முன்பு பெய்த கனமழையின்

விருதுநகர் : விருதுநகரில் மேற்கூரை சேதமடைந்த அங்கன்வாடி மையத்தால் குழந்தைகள் உணவருந்த திண்டாடும் நிலை உள்ளது. விபத்து அபாயத்தை நீக்கி உடனடியாக மேற்கூரையை சீரமைக்க வேண்டும்.

விருதுநகர் தந்திமரத்தெருவில் செந்திக்குமார மீனாட்சி அம்மாள் நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இதன் வளாகத்தில் அப்பகுதிக்கான அங்கன்வாடி மையம் உள்ளது. ஐந்து மாதங்கள் முன்பு பெய்த கனமழையின் போது மரம் சாய்ந்து மேற்கூரை சேதமானது. நாளடைவில் அதிரித்து தற்போது ஆபத்தான நிலையில் உள்ளது. மழை வேறு பெய்து வருவதால் சுவர்கள் ஈரப்பதம் ஏறி பலவீனமாக உள்ளன.தற்போது அங்கன்வாடி குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால் அசம்பாவிதத்தை தவிர்க்க குழந்தைகளுக்கு பள்ளி ஹாலில் வைத்து உணவு வழங்கப்படுகிறது.

நவம்பர் முதல் 1 முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளிக்கு மாணவர்கள் வந்து விட்டால் குழந்தைகளுக்கு இருக்க இடம் இருக்காது. குழந்தைகள், பெற்றோர்கள் வேறு இடமின்றி தவிக்க வாய்ப்புள்ளது. ஆகவே மாவட்ட நிர்வாகம் அங்கன்வாடி மைய மேற்கூரையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை குழந்தைகளுக்கு வாடகை கட்டடத்தில் வைத்து அங்கன்வாடி செயல்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

குழந்தைகளை கூட்டி வர அச்சம் எனது குழந்தையை இங்கு தினசரி மதிய உணவுக்காக அழைத்து வருகிறேன். அங்கன்வாடி கட்டடம் மிகவும் பலவீனமாக உள்ளது. இதனால் என்னை போல மற்ற பெற்றோர்களும் குழந்தைகளை கூட்டி வருவதற்கே அஞ்சுகின்றனர்.கார்த்திகை செல்வி, குடும்பத்தலைவி.கேள்விக்குறியான நிலைஅருகே பள்ளி இருப்பதால் தற்போது ஹாலில் வைத்து உணவு வழங்கப்படுகிறது.

பள்ளிகள் செயல்பட துவங்கிவிட்டால் அதுவும் கேள்விக்குறி தான். மாவட்ட நிர்வாகம் அங்கன்வாடியை புனரமைத்து கான்கீரிட் மேற்கூரை அமைக்க வேண்டும். சுப்புலெட்சுமி, குடும்பத்தலைவி.ஆய்வு நடத்த வேண்டும் மாவட்டத்தில் பல அங்கன்வாடிகளின் நிலை இப்படி தான் உள்ளது. அதிகாரிகள் கட்டட உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். பலவீனமானவற்றை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாகேந்திரன், சமுக ஆர்வலர்.நடவடிக்கை எடுக்கப்படும்விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்மேகநாதரெட்டி, கலெக்டர், விருதுநகர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X