சீக்ரெட் சிங்காரம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சீக்ரெட் சிங்காரம்

Added : அக் 04, 2021
Share
ஜாதி பேர்ல முதல்வர் ஆசை!கை கட்சியில் எட்டு ஆண்டுகளாக மாநிலத்தலைவராக இருந்தவர். துணை முதல்வர் பதவியை பெறுவதற்கே படாதபாடு பட்டவர்.இவருக்கு சி.எம்., பதவி கை நழுவி போனதற்கு உட்கட்சியினரின் சதிவேலையே காரணமாம்.இதனால், அவர் எப்படியேனும் சி.எம்., ஆகவேண்டும் என்பதை 'ஜாதி' ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார். பஞ்சாப் போல கர்நாடகாவுலயும் பட்டியல் ஜாதிக்காயை முதல்வர் ஆக்கவேணும்னு

ஜாதி பேர்ல முதல்வர் ஆசை!கை கட்சியில் எட்டு ஆண்டுகளாக மாநிலத்தலைவராக இருந்தவர். துணை முதல்வர் பதவியை பெறுவதற்கே படாதபாடு பட்டவர்.இவருக்கு சி.எம்., பதவி கை நழுவி போனதற்கு உட்கட்சியினரின் சதிவேலையே காரணமாம்.

இதனால், அவர் எப்படியேனும் சி.எம்., ஆகவேண்டும் என்பதை 'ஜாதி' ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார். பஞ்சாப் போல கர்நாடகாவுலயும் பட்டியல் ஜாதிக்காயை முதல்வர் ஆக்கவேணும்னு அவரோட ஆட்டத்தை தொடங்கி விட்டாரு!ஒரே வாரத்தில் வந்துட்டாங்க 'வாபஸ்!'பூக்கார 'மாஜி' முதல்வர் எடிஜி., பிறந்த மாண்டியா மாவட்டத்து புல்லுக்கட்டுக்கார இரண்டு முக்கிய புள்ளிகள், போன வாரம் தங்களின் கட்சியை துறந்து

பூ கட்சியில் சேர்ந்தாங்க. எட்டே நாளில் அந்த ரெண்டு பேருமே தொட்ட கவுடாவின் விவசாயிகள் சொந்தக் கட்சிக்கே திரும்பிட்டாங்க.புல்லுக்கட்டு மாஜி முதல்வர் தான் தங்களது தலைவர்னு ஓடிப்போய் திரும்பி வந்தவங்க தத்துவம் பேசுறாங்க.ஓடப்போறவங்கள இழுக்கும் மேக்னடிக் வேலைகள் உள்ளுக்குள் நடக்குமாம்.ஒட்டும் வேணாம், உறவும் வேணாம்!கோலாரு மாஜி கைக்கார எம்.பி.,யுடன் சீனிவாசப்பூர் அசம்பிளிக்காரர் ஒண்ணு சேரப் போறதில்லன்னு திட்டவட்டமாக கூறியிருக்காரு.

கடந்த 28 வருஷமா கோலாரை தம் வசம் இறுக்கி பிடிச்சு வைத்து, ஆறு அசம்பிளி தொகுதிக்காரங்களையும் அல்லல் பட வைத்த பழைய காலம் மறுபடியும் ஏற்படாமல் பாத்துக்க அவரால் பாதித்தவங்க ஒண்ணா இருக்காங்க.மறுபடியும் மாஜி எம்.பி., யின் சகவாசமே வேணாம்னு இருக்காங்க. கட்சி மேலிடமோ அனைவருமே ஒற்றுமையா இருக்கணும்னு வலியுறுத்தி வாங்க. ஆனாலும், சீனிவாசப்பூர் அசம்பிளிகாரர் 'மாஜி' எம்.பி., யின் ஒட்டு, உறவு எதுவும் வேணாம்னு அடம் பிடிக்கிறார்.

இவருக்கு ஆதரவாக நான்கு தொகுதிகளும், சட்ட மேலவைக்காரங்களும் உறுதியாக இருக்காங்க.உட்கட்சிக்காரங்களே எதிரிங்களாம்!இடைத் தேர்தல்கள் நடக்கும் ஹானகலில் இம்மாதம் 7;, சிந்தகியில் 8லும் கைக் காரங்க வேட்பு மனுத் தாக்கல் செய்வதாக முடிவெடுத்து இருக்காங்க.வேட்பாளர் யாரென மாநில தலைமை முடிவு செய்திட்டாங்க. யார்னு தெரிந்தும் கூட, அதிகாரப்பூர்வ வேட்பாளரை டெல்லி மேலிடம் தான் அறிவிக்கணுமாம்.ஆனாலும் 'சீட்' கிடைக்காதவங்க காலை வாரிட உள்குத்து வேலையை பார்க்க தயாராயிட்டாங்களாம்!

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X