பொது செய்தி

தமிழ்நாடு

தேனியில் பா.ஜ.,ஆலோசனை கூட்டம்

Added : அக் 04, 2021
Share
Advertisement
தேனி : வார அனைத்து நாட்களும் கோயில்களை திறக்க வலியுறுத்தி அக்.,7ல் தமிழகத்தின் முக்கிய கோயில்கள் முன் காலை 11:00 மணிக்கு நவராத்திரி துவக்க தினத்தில் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் தேனி தனியார் திருமண மஹாலில் மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் நடந்தது.மாவட்ட பொதுச் செயலாளர்கள் மாரிச்செல்வம், மலைச்சாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட அணி

தேனி : வார அனைத்து நாட்களும் கோயில்களை திறக்க வலியுறுத்தி அக்.,7ல் தமிழகத்தின் முக்கிய கோயில்கள் முன் காலை 11:00 மணிக்கு நவராத்திரி துவக்க தினத்தில் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.

இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் தேனி தனியார் திருமண மஹாலில் மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் நடந்தது.மாவட்ட பொதுச் செயலாளர்கள் மாரிச்செல்வம், மலைச்சாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட அணி பிரிவு நிர்வாகிகள், மண்டல் நிர்வாகிகள் பங்கேற்றனர்.கோயில்கள் திறக்கப்படாததால் அதனை சார்ந்த தொழில் செய்பவர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். இதனை தவிர்க்கவும், பொதுமக்கள் விருப்பப்படியும் கோயில்களை வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகளிலும் திறக்க அறநிலையத்துறையும், அரசும் முன் வர வேண்டும். அதற்கான ஆர்ப்பாட்டம் பழநியில் நடக்க உள்ளது. மாவட்டத்தில் உள்ள 25 மண்டல்களில் தலா 200 வீதம் 5 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தேனி நகர தலைவர் விஜயகுமார் நன்றி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X