பொது செய்தி

தமிழ்நாடு

வனப்பகுதியில் தனிப்படையினர் கண்காணிப்பு

Added : அக் 04, 2021
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் வனப்பகுதியில் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் வனத்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு இரவு ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இரவில் இளைஞர்கள் வனப்பகுதிக்கு சென்று தங்கி வருகின்றனர். மேலும் சமூகவிரோதிகள் வனவிலங்குகளை

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் வனப்பகுதியில் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் வனத்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு இரவு ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இரவில் இளைஞர்கள் வனப்பகுதிக்கு சென்று தங்கி வருகின்றனர். மேலும் சமூகவிரோதிகள் வனவிலங்குகளை வேட்டையாடி வருகின்றனர்.இதை தடுக்கும் பொருட்டு புலிகள் காப்பக உதவி இயக்குனர் திலிப் குமார் உத்தரவின் பேரில் ஸ்ரீவில்லிபுத்துார் வனச்சரக அலுவலர் செந்தில்குமார் தலைமையில் துப்பாக்கி ஏந்திய வனத்துறை காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, மலையடிவார பகுதிகளில் இரவு ரோந்து மேற்கொண்டு கண்காணித்து வருகின்றனர். இதனால் சில நாட்களாக வனப்பகுதியில் தனி நபர்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X