பொது செய்தி

இந்தியா

தலிபான்களுடன் ஒப்பிடுவதா? பா.ஜ., - எம்.பி., காட்டம்

Added : அக் 04, 2021
Share
Advertisement
!சாம்ராஜ்நகர் : ''ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை தலிபான் பயங்கரவாதிகளுடன் சித்தராமையா ஒப்பிட்டது, பெருங்குற்றம். தான் கூறிய வார்த்தையை திரும்ப பெற்று, தவறை ஒப்புக்கொள்ள வேண்டும்,'' என பா.ஜ., எம்.பி., சீனிவாச பிரசாத் வலியுறுத்தினார்.சாம்ராஜ்நகரில், அவர் நேற்று கூறியதாவது:ஆவேசத்தில், கோபத்தில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை தலிபானுடன் ஒப்பிட்டு சித்தராமையா பேசியது பெருங்குற்றமாகும். அதை

!சாம்ராஜ்நகர் : ''ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை தலிபான் பயங்கரவாதிகளுடன் சித்தராமையா ஒப்பிட்டது, பெருங்குற்றம். தான் கூறிய வார்த்தையை திரும்ப பெற்று, தவறை ஒப்புக்கொள்ள வேண்டும்,'' என பா.ஜ., எம்.பி., சீனிவாச பிரசாத் வலியுறுத்தினார்.

சாம்ராஜ்நகரில், அவர் நேற்று கூறியதாவது:ஆவேசத்தில், கோபத்தில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை தலிபானுடன் ஒப்பிட்டு சித்தராமையா பேசியது பெருங்குற்றமாகும். அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.தலிபான்களுடையது, ராட்சதத்தனமான செயல்பாடு. இந்த நுாற்றாண்டில், இதுபோன்ற செயல்பாட்டை நான் பார்த்ததில்லை. தலிபான்கள் யாருடனும் ஒப்பிடும் தகுதிடையவர்கள் அல்ல. இதனை ஆர்.எஸ்.எஸ்.,சுடன் ஒப்பிட்டது சரியல்ல.சித்தராமையாவுக்கு தைரியம் இருந்தால், மைசூருக்கு வந்து போட்டியிடட்டும். போட்டியிட முடியாது என, கைகூப்பி வணங்கிவிட்டு செல்வார்.

பாதாமியை தொடர்ந்து, சாம்ராஜ்பேட்டுக்கு செல்கிறார். இங்கு அவரது கதி என்னவாகிறது என்பது தெரியும். அவர் நாடோடி போன்று, தொகுதியை தேடுகிறார்.வட மாநிலங்களில், கட்சியை பலப்படுத்த முடியாமல், காங்., தேசிய தலைவராக இருந்த ராகுலை, வடக்கிலிருந்து அழைத்து வந்து, கேரளாவின் வயனாட்டில் நிறுத்தினர். ஒரு தேசிய கட்சியின் தலைவரின் நிலையே, இப்படி என்றால், சாதாரண தொண்டர்களின் கதி என்ன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X