பொது செய்தி

இந்தியா

மின்சார வாகனங்கள் பயன்பாடு அதிகரிக்கிறது

Added : அக் 04, 2021
Share
Advertisement
பெங்களூரு : ஏறுமுகமாக இருக்கும் எரிபொருள் விலை மற்றும் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் நோக்கில் மின்சார வாகனங்கள் பயன்பாடு அதிகரிக்கிறது. கர்நாடக அரசும், அனைத்து துறைகளில், பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதில், மின்சார கார்களை பயன்படுத்த ஆலோசிக்கிறது. இது நடைமுறைக்கு வந்தால், அரசு கருவூலத்துக்கு ஆண்டு தோறும், நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய் மிச்சமாகும்.காற்று
மின்சார வாகனங்கள் பயன்பாடு அதிகரிக்கிறது

பெங்களூரு : ஏறுமுகமாக இருக்கும் எரிபொருள் விலை மற்றும் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் நோக்கில் மின்சார வாகனங்கள் பயன்பாடு அதிகரிக்கிறது.

கர்நாடக அரசும், அனைத்து துறைகளில், பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதில், மின்சார கார்களை பயன்படுத்த ஆலோசிக்கிறது. இது நடைமுறைக்கு வந்தால், அரசு கருவூலத்துக்கு ஆண்டு தோறும், நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய் மிச்சமாகும்.காற்று மாசுசர்வதேச அளவில், பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கிறது. காற்று மாசுவும் கூட கிடுகிடுவென அதிகரிக்கிறது. இதற்கு பெட்ரோல், டீசல் வாகனங்களே முக்கிய காரணம்.எரிபொருள் விலை உயர்வால், வெறுப்படைந்த மக்கள் மின்சார வாகனங்களில் பார்வையை திருப்பியுள்ளனர். மின்சார கார், இருசக்கர வாகனங்கள் வாங்குவோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

பி.எம்.டி.சி.,யும் கூட, மின்சார பஸ் போக்குவரத்தை துவங்கியுள்ளது. மத்திய அரசின் நிதியுதவியில் மின்சார பஸ்களை வாங்குகிறது. இந்த பஸ்சுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில், 1,500 இ - பஸ்கள் எனப்படும் மின்சார பஸ்கள் வாங்க, போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது.இந்தியாவில் இ - வாகனங்கள் மார்க்கெட்டில், கர்நாடகாவின் பங்களிப்பு, 22 சதவீதமாக உள்ளது. 19 ஆயிரத்து 270 விற்பனையானதன் மூலம், நாட்டிலேயே நம்பர் - - 1 இடத்தில் உள்ளது. பெங்களூரு உட்பட, கர்நாடகாவின் பல இடங்களில், மின்சார ஸ்கூட்டர், கார்கள் விற்பனை அதிகரிக்கிறது.இந்நிலையில், அரசு துறைகளில், பெட்ரோல், டீசல் கார்களுக்கு பதில், இ -- கார்களை பயன்படுத்த ஏற்பாடு நடக்கிறது. கர்நாடக மின்சார கார்ப்பரேஷன், 'பெஸ்காம்' ஒருங்கிணைந்து திட்டம் வகுக்கின்றன. அரசுக்கு கோரிக்கை அனுப்பவுள்ளன. அரசின் அனுமதி கிடைத்தால், அடுத்த ஆறு மாதங்களில், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மின்சார கார்களில் பயணிப்பர்.ஆண்டு தோறும், மாநில அரசு புதிதாக நுாற்றுக்கணக்கான கார்களை வாங்குகிறது.

அதுமட்டுமின்றி, ஆயிரக்கணக்கான கார்களை, வாடகைக்கு பெற்று, பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக மாதந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய் செலவிடுகிறது. இக்கார்கள் பெரும்பாலும் அரசியல் தலைவர்கள், அதிகாரிகளின் பெயரில் உள்ளது.குற்றச்சாட்டு துறையின் கமிஷனர்கள், இணை தலைமை செயலர்கள், அரசியல் தலைவர்கள், இவர்களின் குடும்பத்தினர் சொந்த நோக்கத்துக்கு பயன்படுத்துவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது, அரசுக்கு கூடுதல் சுமை ஏற்படுத்துகிறது. இ -- பஸ்களை இயக்கினால், இது போன்ற முறைகேடுகளுக்கு, கடிவாளம் போடலாம் என, கூறப்படுகிறது.மின்சாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தனியார் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில், முதற்கட்டமாக 1,000 இ -- பஸ்களை வாங்கி, அந்தந்த துறைகளுக்கு அரசு வழங்கும். அதன்பின் படிப்படியாக, கூடுதல் இ -- பஸ்கள் வாங்கப்படும். பஸ்களின் வசதிக்காக, பெங்களூரில் மின்சார சார்ஜிங் மையங்களை, பெஸ்காம் துவங்கியுள்ளது.பொது மக்களின் வசதிக்காக, பி.எம்.டி.சி., தன் டி.டி.எம்.சி.,க்களில் சார்ஜிங் பாயின்டுகள் அமைத்துள்ளது. இங்கு தனியாரும் கூட, கட்டணம் செலுத்தி, சார்ஜிங் செய்து கொள்ளலாம். சார்ஜிங் அரசு இ -- கார்களை வாங்கினால், கர்நாடக மின்சார கார்ப்பரேஷன், மாநிலத்தின் பல இடங்களில், சார்ஜிங் ஸ்டேஷன்களை துவங்க திட்டமிட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X