பொது செய்தி

இந்தியா

மைசூரில் தசரா திருவிழா கொண்டாட்டம்

Added : அக் 04, 2021
Share
Advertisement
மைசூரு : மைசூரில் தசரா திருவிழா கொண்டாட்டம் களை கட்டியுள்ளது. ஆறு மாதங்களுக்கு பின், மைசூருக்கு சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நகரம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.மைசூரு நகர், தசராவுக்கு தயாராகி வருகிறது. கொரோனா குறைந்துள்ளதால், விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணியரால், மைசூரு நிரம்பி வழிகிறது. இவர்களை நம்பி வாழ்க்கை நடத்திய
மைசூரில் தசரா திருவிழா கொண்டாட்டம்

மைசூரு : மைசூரில் தசரா திருவிழா கொண்டாட்டம் களை கட்டியுள்ளது. ஆறு மாதங்களுக்கு பின், மைசூருக்கு சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

. இந்த நகரம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.மைசூரு நகர், தசராவுக்கு தயாராகி வருகிறது. கொரோனா குறைந்துள்ளதால், விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணியரால், மைசூரு நிரம்பி வழிகிறது. இவர்களை நம்பி வாழ்க்கை நடத்திய வியாபாரிகள், வர்த்தகர்கள், தொழிலாளர்களின் முகத்தில் மகிழ்ச்சி தென்படுகிறது.அரண்மனை, மிருகக்காட்சி சாலை, சாமுண்டி மலையில் சுற்றுலா வாசிகள் பெருமளவில் காணப்படுகின்றனர். ஓராண்டுக்கும் மேலாக காலியாக இருந்த மைசூரின் ஓட்டல், சொகுசு விடுதிகள், லாட்ஜ்களில் அறைகள், தற்போது நிரம்பியுள்ளன.மைசூருக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

போலீசார் 'மப்டி' எனப்படும் சீருடையில்லாமல் சாலைகளில் ரோந்து சுற்றி, மக்களை கண்காணிக்கின்றனர். சந்தேகத்திற்கிடமானவர்களை கண்டால், விசாரணை நடத்துகின்றனர்.மைசூரு மட்டுமின்றி, கர்நாடகாவின் பல மாவட்டங்களிலும் கூட, சுற்றுலா தலங்களில் மக்களின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழகம், ஆந்திரா, கொரோனா அதிகமாக உள்ள கேரளாவிலிருந்து, பெருமளவில் வந்துள்ளனர். இவர்கள் சமூக விலகலை மறந்து, கூட்டம், கூட்டமாக நடமாடுகின்றனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.வேறு மாநிலங்களிலிருந்து வருவோர், பொறுப்புணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி, சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க வேண்டும் என, அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள், கோரிக்கை விடுத்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X