பொது செய்தி

இந்தியா

மேகதாது அணை விவாகரத்தில் பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை; முதல்வர் பசவராஜ் பொம்மை

Added : அக் 04, 2021
Share
Advertisement
பல்லாரி : ''மேகதாது அணை விவாகரத்தில் பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை,'' என முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார்.பல்லாரியில் முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று கூறியதாவது:மேகாதாது அணை விவகாரத்தில் எந்த காரணத்தை கொண்டும் பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. மேகதாது அணையை தடுக்கவோ சட்டம் இயற்றவோ தமிழகத்துக்கு உரிமை இல்லை. கர்நாடக அரசு அணை விவாகரத்தில் உறுதியாக

பல்லாரி : ''மேகதாது அணை விவாகரத்தில் பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை,'' என முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார்.பல்லாரியில் முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று கூறியதாவது:

மேகாதாது அணை விவகாரத்தில் எந்த காரணத்தை கொண்டும் பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. மேகதாது அணையை தடுக்கவோ சட்டம் இயற்றவோ தமிழகத்துக்கு உரிமை இல்லை. கர்நாடக அரசு அணை விவாகரத்தில் உறுதியாக உள்ளது.சிந்தகி, ஹானகல் ஆகிய இரண்டு தொகுதி இடத்தேர்தல் எங்களுக்கு சவாலாக உள்ளது. எழுதி வைத்து கொள்ளுங்கள், இரண்டு தொகுதியிலும் வெற்றி பெறுவோம்.இரண்டு தொகுதியிலும் பா.ஜ.,சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்து மேலிடத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த தேர்தல் ஒன்றும் அரையிறுதி அல்ல. ஏனென்றால் இதற்கு முன் நஞ்சன்கூடு, குண்டல்பேட் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தாலும், பின் ஆட்சியை பறிகொடுத்தது.பல்லாரியில் தொழிற்சாலைக்கு நில வங்கி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நவம்பரில் இங்கு சுற்றுப்பயணம் செய்து பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்.இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X