இந்தியா

தற்கொலையை அரசு தடுத்திருக்கலாம்; ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமி

Added : அக் 04, 2021
Share
Advertisement
பெங்களூரு : ''நெலமங்களாவில், போக்குவரத்துக்கழக ஊழியரின் மனைவி மற்றும் பிள்ளைகளின் தற்கொலையை அரசு தடுத்திருக்கலாம். அனுதாப அடிப்படையில் வேலை கொடுத்திருந்தால், மூன்று உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்,'' என ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.இது குறித்து, டுவிட்டர் சமூக வலைதளத்தில் அவர் நேற்று கூறியதாவது:நெலமங்களாவில் போக்குவரத்துக்கழக ஊழியரின்
 தற்கொலையை அரசு தடுத்திருக்கலாம்; ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமி

பெங்களூரு : ''நெலமங்களாவில், போக்குவரத்துக்கழக ஊழியரின் மனைவி மற்றும் பிள்ளைகளின் தற்கொலையை அரசு தடுத்திருக்கலாம். அனுதாப அடிப்படையில் வேலை கொடுத்திருந்தால், மூன்று உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்,'' என ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.

இது குறித்து, டுவிட்டர் சமூக வலைதளத்தில் அவர் நேற்று கூறியதாவது:நெலமங்களாவில் போக்குவரத்துக்கழக ஊழியரின் மனைவியும், பிள்ளைகளும் தற்கொலை செய்து கொண்டது வருத்தமளிக்கிறது. அனுதாப அடிப்படையில், அரசு வேலை கொடுத்திருந்தால், இந்த அசம்பாவிதத்தை தடுத்திருக்கலாம். மூன்று உயிர்கள் பிழைத்திருக்கும்.இது கொலைகார அரசு. அனைத்து தண்டச்செலவு, கொள்ளையை நிறுத்தி, இது போன்றவர்களின் உதவிக்கு, அரசு வந்திருக்க வேண்டும். இவ்விஷயத்தில், அரசு தோல்வியடைந்துள்ளது.

அதிகாரிகளின் பொறுப்பின்மை தெரிகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை, பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். முதல்வர் பசவராஜ் பொம்மை, இதில் கவனம் செலுத்தி, கொரோனாவால் இறந்த, போக்குவரத்துக்கழக ஊழியர்களின் குடும்பங்களுக்கு, உதவிக்கரம் நீட்டுவதன் மூலம், அசம்பாவிதங்களை தடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X