பொது செய்தி

இந்தியா

மொபைல் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Added : அக் 04, 2021
Share
Advertisement
மைசூரு : கொரோனா 2வது அலைக்கு பின், மொபைல் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக மைசூரில், மொபைல் விற்பனை 15 சதவீதம் அதிகரித்துள்ளது.பத்து ஆண்டுகளுக்கு முன், யாராவது பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியதாக கூறினால், மற்றவர்கள் சிரிப்பர். ஆனால் கொரோனா, அனைத்தையும் தலை கீழாக மாற்றியது. இதற்கு முன், நகர்ப்பகுதிகளில் மொபைல் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை

மைசூரு : கொரோனா 2வது அலைக்கு பின், மொபைல் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

குறிப்பாக மைசூரில், மொபைல் விற்பனை 15 சதவீதம் அதிகரித்துள்ளது.பத்து ஆண்டுகளுக்கு முன், யாராவது பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியதாக கூறினால், மற்றவர்கள் சிரிப்பர். ஆனால் கொரோனா, அனைத்தையும் தலை கீழாக மாற்றியது. இதற்கு முன், நகர்ப்பகுதிகளில் மொபைல் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது கிராமங்களிலும் மொபைல் பயன்பாடு அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் கொரோனா கால் வைத்த போது, பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. மாணவர், மாணவியருக்கு, கல்வி கிடைக்க வேண்டும் என்பதால், ஆன்லைனில் வகுப்புகள் நடத்தும்படி உத்தரவிட்டது.அனைவரிடமும் மடிகணினி, டேப் இருக்காது. திடீரென ஆன்லைன் வகுப்புகள் துவங்கியதால், ஆரம்பத்தில் பெற்றோர், தங்களின் மொபைல் மூலமாகவே, மகன் அல்லது மகளை ஆன்லைன் வகுப்பில், பங்கேற்க செய்தனர். ஆனால் பெற்றோர் பணிக்காக, வெளியே செல்ல வேண்டியிருந்ததால், பிள்ளைகளுக்கு தனியாக மொபைல் வாங்க வேண்டிய, கட்டாயம் ஏற்பட்டது.கிராமப்பகுதிகளிலும், மொபைல் பயன்பாடு, விற்பனை அதிகமாகியுள்ளது. மைசூரில் 15 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. தற்போது அனைவரின் கையிலும், மொபைல் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X