பொது செய்தி

தமிழ்நாடு

'40 ஆண்டுகளாக வசிப்போருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்படும்'

Added : அக் 04, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு : ''அரசு புறம்போக்கு நிலங்களில் 40 ஆண்டுகளாக வசிப்போருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்படும்,'' என, ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன் பேசினார்.காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில், தி.மு.க., சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், ஆலப்பாக்கம் முன்னாள் ஊராட்சி தலைவர் திருமலை தலைமையில், வேண்பாக்கத்தில் நேற்று நடந்தது.மாவட்ட

செங்கல்பட்டு : ''அரசு புறம்போக்கு நிலங்களில் 40 ஆண்டுகளாக வசிப்போருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்படும்,'' என, ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன் பேசினார்.காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில், தி.மு.க., சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், ஆலப்பாக்கம் முன்னாள் ஊராட்சி தலைவர் திருமலை தலைமையில், வேண்பாக்கத்தில் நேற்று நடந்தது.

மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் பூங்கோதை ராஜன், ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர்கள் நிந்திமதி திருமலை, வேலன் மற்றும் ஆலப்பாக்கம் ஊராட்சி தலைவர் வேட்பாளர் பரிமளா மற்றும் வார்டு உறுப்பினர்கள் அறிமுகம் செய்து வைக்கப் பட்டனர்.தொடர்ந்து மாவட்ட செயலர் மற்றும் ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று பேசியதாவது:முதல்வர் ஸ்டாலின், தி.மு.க.., தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்.

கொரோனா நிவாரண நிதி 4,000 ரூபாய் வழங்கியுள்ளார். மகளிர் இலவசமாக பஸ்சில் பயணம் செய்யும் திட்டத்தையும் செயல்படுத்தி உள்ளார்.உள்ளாட்சி தேர்தலில் தலைவர் வெற்றி பெற்றால் தான், ஊராட்சியில் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த முடியும்.அரசு வீடுகள் ஒதுக்கீட்டிற்கு பயனாளிகளை தேர்வு செய்து, தீர்மானம் நிறைவேற்றி தரும் அதிகாரம், ஊராட்சி தலைவருக்கு உண்டு. இதனால், தி.மு.க., வேடபாளர்களை ஆதரிக்க வேண்டும்.இந்த ஊராட்சியில் திட்டங்களை செயல்படுத்த, எம்.பி., - எம்.எல்.ஏ., நிதிகள் ஒதுக்கீடு செய்யப்படும். அரசு புறம்போக்கு நிலங்களில், 40 ஆண்டுகளாக வீடு கட்டி வசிப்போருக்கு வீட்டுமனை பட்டா பெற்று தரப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.காஞ்சிபுரம் எம்.பி., செல்வம், மதுராந்தகம் எம்.எல்.ஏ., வரலட்சுமி மதுசூதனன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X