பொது செய்தி

இந்தியா

சிறார்களுக்கு கோவாக்சின்: அறிக்கை சமர்ப்பிப்பு

Updated : அக் 04, 2021 | Added : அக் 04, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஐதராபாத்-சிறார்களுக்கான 'கோவாக்சின்' தடுப்பூசியை தயாரித்து, இரண்டு கட்ட பரிசோதனைகளை நிறைவு செய்துள்ள, 'பாரத் பயோடெக்' நிறுவனம், பரிசோதனை முடிவுகளை இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பிடம் சமர்ப்பித்துள்ளது.நம் நாட்டில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. 'சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா'

ஐதராபாத்-சிறார்களுக்கான 'கோவாக்சின்' தடுப்பூசியை தயாரித்து, இரண்டு கட்ட பரிசோதனைகளை நிறைவு செய்துள்ள, 'பாரத் பயோடெக்' நிறுவனம், பரிசோதனை முடிவுகளை இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பிடம் சமர்ப்பித்துள்ளது.



latest tamil news


நம் நாட்டில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. 'சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா' நிறுவனத்தின் 'கோவிஷீல்டு' தடுப்பூசியும், 'பாரத் பயோடெக்' நிறுவனத்தின் 'கோவாக்சின்' தடுப்பூசியும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இரண்டு 'டோஸ்'களாக செலுத்தப்படுகின்றன.

இதற்கிடையே, 12 - 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்காக குஜராத்தின் ஆமதாபாதை சேர்ந்த, 'சைடஸ் கெடிலா' நிறுவனம் தயாரித்த தடுப்பூசிக்கு, டி.சி.ஜி.ஐ., எனப்படும் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அவசர கால பயன்பாட்டிற்கு கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், 2 முதல்18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்துதுள்ள பாரத் பயோடெக் நிறுவனம், பரிசோதனை முடிவுகளை, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பிடம் சமர்ப்பித்து உள்ளது.


விலை எவ்வளவு?

குஜராத்தின் ஆமதாபாதைச் சேர்ந்த, 'சைடஸ் கேடிலா' நிறுவனம், 12 முதல்18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான தடுப்பூசியை தயாரித்துள்ளது.டி.என்.ஏ., எனப்படும் மரபணு அடிப்படையிலான, உலகின் முதல் தடுப்பூசியான இதைப் பயன்படுத்த, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு, கடந்த ஆக., இறுதியில் ஒப்புதல் அளித்தது .மூன்று, 'டோஸ்' உடைய இந்த தடுப் பூசிக்கு, அந்த நிறுவனம் 1,900 ரூபாய் விலை கேட்கிறது. இது தொடர்பாக, நிறுவனத்துடன் மத்திய அரசு உயர் அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.


latest tamil news


இது குறித்து, மத்திய சுகாதாரத் துறை உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது:ஊசி இல்லாமல், 'இன்ஜெக்டர்' எனப்படும் சிறப்பு கருவியின் மூலம் மூக்கு வழியாக இந்த தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். அந்த இன்ஜெக்டரின் விலை 30 ஆயிரம் ரூபாய். ஒரு இன்ஜெக்டர் மூலம் 20 ஆயிரம், 'டோஸ்' தடுப்பூசி செலுத்தலாம்.அதனால் மற்ற தடுப்பூசிகளைவிட இதன் விலையை குறைக்க பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. மிக விரைவில் விலை நிர்ணயிக்கப்பட்டு, நாடு முழுதும் பயன்பாட்டுக்கு வரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
04-அக்-202112:03:21 IST Report Abuse
Ramesh Sargam விலை குறைக்கப்படவேண்டும். சிறார்களுக்கு சீக்கிரம் தடுப்பு ஊசி போட துவங்க வேண்டும். இதிலும் அரசியல் கட்சிகள் மூக்கை நுழைத்து அரசியல் செய்ய வேண்டாம்.
Rate this:
Cancel
PKN - Chennai,இந்தியா
04-அக்-202107:45:58 IST Report Abuse
PKN முதலில் எங்களுக்காக போட்டதுக்கு உலக அரங்கில் அப்ரூவல் வாங்குங்க தெரியாத்தனமாக போட்டு கிட்டு வெளிநாடு போக பிரச்சினையாக இருக்கு இருக்கறதுக்கு அப்ருவல் வாங்காம இப்ப சிறுவர்களுக்கு டெஸ்ட் பண்ராங்களாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X