மணமையில் தீராத சர்ச்சை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மணமையில் தீராத சர்ச்சை

Added : அக் 04, 2021
Share
திருக்கழுக்குன்றம் ஒன்றியம், மணமை ஊராட்சி தலைவர் பதவி, பொது பிரிவிற்கானது. கடந்த 2006ம், 2011ம் தேர்தல்களிலும் இப்பிரிவாக இருந்தது. ஆதிதிராவிடரான வீராசாமி என்பவர் தொடர்ந்து வெற்றி பெற்று தலைவரானார்.இவ்வூரைச் சேர்ந்த கல்பாக்கம் ஒப்பந்ததாரர், ஊராட்சி நிர்வாகத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க தீவிரம் காட்டி, வீராசாமியை தோற்கடிக்க முயன்றார்; இயலவில்லை.எனவே தலைவருக்கு

திருக்கழுக்குன்றம் ஒன்றியம், மணமை ஊராட்சி தலைவர் பதவி, பொது பிரிவிற்கானது. கடந்த 2006ம், 2011ம் தேர்தல்களிலும் இப்பிரிவாக இருந்தது.

ஆதிதிராவிடரான வீராசாமி என்பவர் தொடர்ந்து வெற்றி பெற்று தலைவரானார்.இவ்வூரைச் சேர்ந்த கல்பாக்கம் ஒப்பந்ததாரர், ஊராட்சி நிர்வாகத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க தீவிரம் காட்டி, வீராசாமியை தோற்கடிக்க முயன்றார்; இயலவில்லை.எனவே தலைவருக்கு எதிராக, வார்டு உறுப்பினர்களை துாண்டியதால், ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து முடங்கியது.

கடந்த 2011 - 16ம் ஆண்டில் நிர்வாகத்தை கலைக்கும் முயற்சியாக, அனைத்து வார்டு உறுப்பினர்களும், மாவட்ட, வட்டார வளர்ச்சி நிர்வாகங்களிடம், 'ராஜினாமா' கடிதம் அளித்தனர். இது குறித்து அரசு முடிவெடுக்காமல் இழுத்தடித்தது.இதன் காரணமாக, கிராமசபை கூட்டங்களை முறையாக நடத்தாமல், சிக்கலுடனே கடந்து பதவி காலமும் முடிந்தது.தற்போதைய தேர்தலிலும், தலைவர் பதவிக்கு வீராசாமி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, முன்னாள் பெண் வார்டு உறுப்பினரின் கணவர் செங்கேணி போட்டியிடுகிறார்.

இவரது போட்டிக்கு பின்னணி யில், கல்பாக்கம் ஒப்பந்ததாரர் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தான் தி.மு.க.,வின் வேட்பாளர் கூறி ஓட்டு சேகரிக்கப்பட்டு வருகிறது.வீராசாமியை எதிர்த்து, முன்னர் ராஜினாமா கடிதம் அளித்த மூன்று பேர், இந்த தேர்தலிலும் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். இவர்கள் குறித்து, தேர்தல் அலுவலர்களிடம் வீராசாமி புகார் அளித்துள்ளார்.இந்த தேர்தலில் மக்கள் பிரதிநிதிகள் எதிரும் புதிருமாக தேர்வானால், அவர்கள் பதவியில் நிலைத்து, ஒத்துழைப்புடன் நிர்வாகம் நடக்குமா அல்லது 'பழைய குருடி கதவை திறடி' என்பது போல ஆகிவிடுமா என, பொதுமக்கள் விரக்தியுடன் கேள்வி எழுப்புகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X