பணம், பரிசுக்கு மாற்று | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பணம், பரிசுக்கு மாற்று

Added : அக் 04, 2021
Share
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவரவர் வசதி, ஆள் பலத்தை பொறுத்து வாக்காளர்களை கவரும் வகையில் பரிசு பொருட்களை வழங்கி வருகின்றனர்.இதில் திருப்போரூர் ஒன்றியம் காயார் ஊராட்சி, ஐந்தாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் பெண் ஒருவர், புதுவகையை கையாள்கிறார்.கொரோனா தொற்று நெருக்கடியான சமயத்தை மனதில் வைத்து,

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவரவர் வசதி, ஆள் பலத்தை பொறுத்து வாக்காளர்களை கவரும் வகையில் பரிசு பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இதில் திருப்போரூர் ஒன்றியம் காயார் ஊராட்சி, ஐந்தாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் பெண் ஒருவர், புதுவகையை கையாள்கிறார்.கொரோனா தொற்று நெருக்கடியான சமயத்தை மனதில் வைத்து, பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில், வாக்காளர்களுக்கு முக கவசம், கபசுர குடிநீர் வழங்கி ஓட்டு சேகரிக்கிறார்.அந்த வேட்பாளர் கூறுகையில், 'கொரோனா பரவலை தடுக்க அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும், முக கவசம் அணிவதன் முக்கியதுவத்தை வலியுறுத்தும் விதமாகவும் முக கவசம், கபசுர குடிநீர் வழங்குகிறேன். 'பணம், பரிசு கொடுக்க வசதி இல்லாததால், இவ்வகையான பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளேன்' என்றார்.மேலும் 'தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தியும், தங்களுக்கு நேர்மையாக ஓட்டு செலுத்த வேண்டும்' எனவும் வலியுறுத்தினார். வாக்காளர்களும் முகமலர்ச்சிடன் அவற்றை வாங்கி செல்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X