பொது செய்தி

தமிழ்நாடு

இப்ப என்ன செய்வீங்க...

Added : அக் 04, 2021
Share
Advertisement
தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்கள், தங்களது சின்னத்தை வாக்காளர்களின் மனதில் பதிய வைக்க, பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் ஊராட்சி தலைவருக்கு போட்டியிடும் பெண் வேட்பாளர் ஒருவர், சற்று வித்தியாசமாக யோசித்து, தன் 'ஸ்கூட்டி' இருசக்கர வாகனத்தையே, பிரசார வாகனமாக பயன்படுத்தி வருகிறார்.ஸ்கூட்டியை மஞ்சள் நிறமாக

தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்கள், தங்களது சின்னத்தை வாக்காளர்களின் மனதில் பதிய வைக்க, பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.

உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் ஊராட்சி தலைவருக்கு போட்டியிடும் பெண் வேட்பாளர் ஒருவர், சற்று வித்தியாசமாக யோசித்து, தன் 'ஸ்கூட்டி' இருசக்கர வாகனத்தையே, பிரசார வாகனமாக பயன்படுத்தி வருகிறார்.ஸ்கூட்டியை மஞ்சள் நிறமாக மாற்றியதோடு, அதில் கண்ணாடி, சீட்டு, வாகனத்தின் முன்பக்கம், பின்பக்கம் என அனைத்து இடங்களிலும், தான் போட்டியிடும் சின்னத்தை ஒட்டி வைத்துள்ளார்.

பெண் வேட்பாளர் கூறியதாவது:தேர்தல் பிரசாரத்திற்கு ஆதரவாளர்களுடன் நடந்து சென்று ஓட்டு சேகரிக்கிறேன். என்றாலும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க கடைத்தெருவுக்கு செல்லும்போது, அனைவரும் என் வாகனத்தையே பார்க்கின்றனர்.இப்படி தொடர்ந்து பார்ப்பதால், வாகனத்தில் ஒட்டப்பட்டுள்ள ஆட்டோ சின்னம் அவர்களின் மனதில் பதியும்.தவிர, மைக், ஒலிபெருக்கி இல்லாமல் பிரசாரம் செய்வதால், தேர்தல் அலுவலரின் அனுமதி தேவைப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.ஸ்கூட்டியில் வந்து, ஆட்டோ சின்னத்திற்கு பிரசாரம் செய்கிறாரே என, சிலர் 'கமென்ட்' அடிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X