பொது செய்தி

தமிழ்நாடு

சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி!

Added : அக் 04, 2021
Share
Advertisement
உத்திரமேரூர் ஒன்றியத்தின் சில ஊராட்சிகள், ஐந்து அல்லது ஆறு கிராமங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றன. இந்த ஊராட்சிகளில் 3,000 - 4,000 ஓட்டுகள் உள்ளன.இது தவிர, ஒரே ஒரு கிராமத்தை மட்டும் உடைய ஊராட்சிகளும் இருக்கின்றன. இதில் 1,000க்கும் குறைவான வாக்காளர்களே இருப்பர்.அதன்படி பழவேரி, பினாயூர், சாத்தணஞ்சேரி, காவியதண்டலம், திருமுக்கூடல், மதுார், புல்லம்பாக்கம்உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட

உத்திரமேரூர் ஒன்றியத்தின் சில ஊராட்சிகள், ஐந்து அல்லது ஆறு கிராமங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றன.

இந்த ஊராட்சிகளில் 3,000 - 4,000 ஓட்டுகள் உள்ளன.இது தவிர, ஒரே ஒரு கிராமத்தை மட்டும் உடைய ஊராட்சிகளும் இருக்கின்றன. இதில் 1,000க்கும் குறைவான வாக்காளர்களே இருப்பர்.அதன்படி பழவேரி, பினாயூர், சாத்தணஞ்சேரி, காவியதண்டலம், திருமுக்கூடல், மதுார், புல்லம்பாக்கம்உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஊர்கள், ஒரு கிராமத்தை மட்டுமே உடைய ஊராட்சியாக இருக்கின்றன. ஓர் ஊராட்சிக்கு ஆறு வார்டுகள் என பிரிக்கப்பட்டு உள்ளதால், ஒரு வார்டில் 100ல் இருந்து 200 ஓட்டுகள் இருக்கும்.

பழவேரி ஊராட்சியில் 605 வாக்காளர்கள் உள்ளனர். இந்த ஊராட்சியின் நான்காவது வார்டில் 86 ஓட்டுகள் மட்டுமே உள்ளன. இந்த 86 ஓட்டுக்கு,நான்கு வார்டு உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர். குறைந்தபட்சம் 25 ஓட்டுகள் பெற்றாலே, அந்த வேட்பாளர் வெற்றி வாகை சூடி விடுவார்.இதனால் போட்டியிடும் வேட்பாளர்கள், 'முத்துக்கு முத்தாக... சொத்துக்கு சொத்தாக... அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக...' என, உறவு சங்கிலியை வீசி வருகின்றனர்.இவர்கள் ஓட்டு கிடைத்தால் வெற்றி உறுதி என்பதால், ஒரே தெருவில், ஏற்கனவே சண்டையிட்டு மல்லுக்கட்டி கொண்டிருந்த உறவுக்காரர்களை அழைத்து பேசி, கூடி கும்மாளமிட்டு வருகின்றனர். தன்னை ஜெயிக்க வைக்க வேண்டும் என, அன்பு மழை பொழிகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X