பொது செய்தி

இந்தியா

மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது

Added : அக் 04, 2021
Share
Advertisement
கண்டமங்கலம் : புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி, கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் உள்ளிட்ட போலீசார் கண்டமங்கலம் ரயில்வேகேட் அருகில் வாகன சோதனையில்

கண்டமங்கலம் : புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி, கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் உள்ளிட்ட போலீசார் கண்டமங்கலம் ரயில்வேகேட் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.மோட்டார் சைக்கிளில் மூட்டையுடன் வந்தவர் போலீசாரைக் கண்டதும் வேறு வழியாக செல்ல முயன்றார். போலீசார் அவரை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அவர் ஏற்றி வந்த பார்சலில் 150 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவர் புதுச்சேரி மூலக்குளம் ஜே.ஜே. நகரைச் சேர்ந்த முனுசாமி, 45; என தெரிந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலையொட்டி, அதிக விலைக்கு விற்பனை செய்ய புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தியது தெரிய வந்தது.போலீசார் முனுசாமியை கைது செய்து, மது பாட்டில் களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X