பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஸ்., மாற்றப்பட்ட விவகாரம் தகாத உறவு காரணம்?

Added : அக் 04, 2021
Share
Advertisement
திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்து, போலீஸ் ஐ.ஜி., அலுவலக காத்திருப்பிற்கு மாற்றப்பட்ட முனிசேகரின் தகாத உறவு வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் முனிசேகர்.பல குற்றச்சாட்டுகடந்த 2019ல், ராஜஸ்தான் கொள்ளையன் நாதுராமை பிடிக்க சென்ற போலீசாருடன், இவரும் அனுப்பப்பட்டார்.
 இன்ஸ்., மாற்றப்பட்ட விவகாரம்   தகாத உறவு காரணம்?


திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்து, போலீஸ் ஐ.ஜி., அலுவலக காத்திருப்பிற்கு மாற்றப்பட்ட முனிசேகரின் தகாத உறவு வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் முனிசேகர்.பல குற்றச்சாட்டுகடந்த 2019ல், ராஜஸ்தான் கொள்ளையன் நாதுராமை பிடிக்க சென்ற போலீசாருடன், இவரும் அனுப்பப்பட்டார்.

கொள்ளையனை பிடிக்க முனிசேகர் துப்பாக்கியால் சுட்டதில், இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் இறந்தார்.இந்த சர்ச்சையால், சென்னையிலிருந்து திருக்கழுக்குன்றத்திற்கு மாற்றப்பட்டார். போலீஸ் எஸ்.பி., அலுவலகம், ஓட்டேரி போலீஸ் ஸ்டேஷன் என மாற்றப்பட்டு, மீண்டும் திருக்கழுக்குன்றத்திற்கே கடந்த ஜூனில் நியமிக்கப்பட்டார்.எந்நேரமும் மது போதையில் மிதப்பது, பெண்களுடன் உல்லாசம், கொள்ளை, திருட்டு வழக்குகளை பதியாமல் புறக்கணிப்பது என, இவர் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இச்சூழலில், கடந்த செப்., 27ல், வடக்கு மண்டல ஐ.ஜி., அலுவலக காத்திருப்பு பணியிடத்திற்கு அதிரடியாக மாற்றப்பட்டார். அவரது தகாத உறவு வீடியோவால், அவருக்கு இடமாற்றம் அளிக்கப்பட்டு உள்ளது தற்போது தெரியவந்துள்ளது.சென்னை, பழைய வண்ணாரபேட்டை பகுதி முஸ்லீம் நபரின் மனைவி, திருக்கழுக்குன்றம் அடுத்த, நெல்வாய் பகுதியைச் சேர்ந்தவர். அவருக்கு 2012ல் திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளனர்.

நெல்வாயில் உள்ள சகோதரி வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற அப்பெண்மணியை, முனிசேகர் வளைத்துஉள்ளார். மனைவி, கணவருடன் பாராமுகமாக இருந்ததால், மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, அவரது மொபைல் போனை சோதித்தார்.மிரட்டல்அதில் அப்பெண்ணுடன் முனிசேகர் தொடர்பில் இருந்ததும், ஆபாச நிலையில் பெண்ணுடன் 'வாட்ஸ் ஆப்' வீடியோ கால் பேசிய படமும் பதிவாகியிருந்தது. இது தொடர்பாக முனிசேகரிடம் கேட்டதால் அவரையும் மிரட்டி உள்ளார்.இந்த வீடியோ கால் பதிவை வைத்து, போலீஸ் டி.ஜி.பி., உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிக்கு, கணவர் புகார் அனுப்பியதை அடுத்து, முனிசேகர் மாற்றப்பட்டுள்ளார்.கணவர் அளித்த புகார் கடிதம், ஆபாச வீடியோ கால் பதிவு, சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X