பொது செய்தி

இந்தியா

நீலக்கொடி கடற்கரையில் குவியும் சுற்றுலா பயணிகள்

Added : அக் 04, 2021
Share
Advertisement
அரியாங்குப்பம் : சின்ன வீராம்பட்டிணம் ஈடன் கடற்கரையில் நேற்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தந்தனர்.அரியாங்குப்பம் அடுத்த சின்ன வீராம்பட்டினத்தில் ஈடன் கடற்கரை அமைந்துள்ளது.இந்த கடற்கரை சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில், பல்வேறு அடிப்படை வசதிகளுடன், துாய்மையாக, பாதுகாப்பானதாக இருப்பதால், 'நீலக்கொடி கடற்கரை' என்ற சான்றிதழை, டென்மார்க் நாடு சமீபத்தில்
 நீலக்கொடி கடற்கரையில் குவியும் சுற்றுலா பயணிகள்

அரியாங்குப்பம் : சின்ன வீராம்பட்டிணம் ஈடன் கடற்கரையில் நேற்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தந்தனர்.அரியாங்குப்பம் அடுத்த சின்ன வீராம்பட்டினத்தில் ஈடன் கடற்கரை அமைந்துள்ளது.

இந்த கடற்கரை சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில், பல்வேறு அடிப்படை வசதிகளுடன், துாய்மையாக, பாதுகாப்பானதாக இருப்பதால், 'நீலக்கொடி கடற்கரை' என்ற சான்றிதழை, டென்மார்க் நாடு சமீபத்தில் வழங்கியது. இதனால் இக்கடற்கரைக்கு உலகளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், உள்ளுர் மற்றும் வெளியூரில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஈடன் கடற்கரையில் குவிந்தனர். சுற்றுலா பயணிகள் கடலில் குளித்து மகிழ்ந்தனர். ஊஞ்சல், சறுக்குமரம் உள்ளிட்டவற்றில் குழந்தைகள் உற்சாகமாக விளையாடினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X