பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு ; என்.ஆர்.டிரேட் யூனியன் காங்.,

Added : அக் 04, 2021
Share
Advertisement
புதுச்சேரி : அமுதசுரபி நிறுவன ஊழியர்களுக்கு கல்வித்தகுதி மற்றும் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என, என்.ஆர்.டிரேட் யூனியன் காங்., கேட்டுக்கொண்டுள்ளது.அமுதசுரபி என்.ஆர்.டிரேட் யூனியன் காங்., நிர்வாகிகள் கூட்டம், என்.ஆர்.,காங்., அலுவலகத்தில் நடந்தது. மாநில கவுரவத் தலைவர் ஜெயபால், மாநிலத் தலைவர் மோகன்தாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து
பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு ;  என்.ஆர்.டிரேட் யூனியன் காங்.,

புதுச்சேரி : அமுதசுரபி நிறுவன ஊழியர்களுக்கு கல்வித்தகுதி மற்றும் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என, என்.ஆர்.டிரேட் யூனியன் காங்., கேட்டுக்கொண்டுள்ளது.

அமுதசுரபி என்.ஆர்.டிரேட் யூனியன் காங்., நிர்வாகிகள் கூட்டம், என்.ஆர்.,காங்., அலுவலகத்தில் நடந்தது. மாநில கவுரவத் தலைவர் ஜெயபால், மாநிலத் தலைவர் மோகன்தாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், அமுதசுரபி ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 17 மாத சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். 19 ஆண்டுகளாக பணிபுரியும் ஊழியர்களுக்கு கல்வித் தகுதி மற்றும் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். முதல்வர் சட்டசபையில் அறிவித்த 2 மாத சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். தீர்மானங்களை முதல்வர் ரங்கசாமிக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X