பொது செய்தி

இந்தியா

என்.ஆர்.காங்., வழக்கறிஞர் அணி முதல்வர் ரங்கசாமிக்கு நன்றி

Added : அக் 04, 2021
Share
Advertisement
புதுச்சேரி : இளம் வழக்கறிஞர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.5000 வழங்க உத்தர விட்ட முதல்வர் ரங்கசாமிக்கு, என்.ஆர்.காங்., வழக்கறிஞர் அணி நன்றி தெரிவித்து உள்ளது.என்.ஆர்.காங்., மாநில வழக்கறிஞர் அணி கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. முன்னாள் டில்லி சிறப்பு பிரதிநிதி பக்தவச்சலம் தலைமை தாங்கினார். ஜெயபால், வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் லட்சுமிநாராயணன், மூத்த

புதுச்சேரி : இளம் வழக்கறிஞர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.5000 வழங்க உத்தர விட்ட முதல்வர் ரங்கசாமிக்கு, என்.ஆர்.காங்., வழக்கறிஞர் அணி நன்றி தெரிவித்து உள்ளது.என்.ஆர்.காங்., மாநில வழக்கறிஞர் அணி கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது.

முன்னாள் டில்லி சிறப்பு பிரதிநிதி பக்தவச்சலம் தலைமை தாங்கினார். ஜெயபால், வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் லட்சுமிநாராயணன், மூத்த வழக்கறிஞர் ரங்கநாதன், குமரன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில் இளம் வழக்கறிஞர்களுக்கு ஊக்கத் தொகையாக 5,000 ரூபாய் வழங்க ஆணை பிறப்பித்த முதல்வர் ரங்கசாமி, உறுதுணையாக இருந்த அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு நன்றி தெரிவிப்பது.நீதித்துறையில் தேர்வு செய்யப்பட உள்ள நீதிபதி பதவிகளுக்கு புதுச்சேரியை சேர்ந்த வழக்கறிஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X