பொது செய்தி

இந்தியா

ஐ.ஆர்.பி.என்., ஊழியர்கள்

Added : அக் 04, 2021
Share
Advertisement
புதுச்சேரி : இந்திய ரிசர்வ் பட்டாலியன் கடைநிலை ஊழியர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.பி., யிடம் மனு அளிக்கப்பட் டுள்ளது.இந்திய ரிசர்வ் பட்டாலியன் கடைநிலை ஊழியர் கள் ராஜ்யசபா எம்.பி., செல்வகணபதியிடம் கொடுத்துள்ள மனு:இந்திய ரிசர்வ் பட்டாலியன் கடைநிலை ஊழியர்களில் சமையல்காரர்களாக கடந்த 17 ஆண்டுகளாக பணி செய்து
 ஐ.ஆர்.பி.என்., ஊழியர்கள்

புதுச்சேரி : இந்திய ரிசர்வ் பட்டாலியன் கடைநிலை ஊழியர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.பி., யிடம் மனு அளிக்கப்பட் டுள்ளது.

இந்திய ரிசர்வ் பட்டாலியன் கடைநிலை ஊழியர் கள் ராஜ்யசபா எம்.பி., செல்வகணபதியிடம் கொடுத்துள்ள மனு:இந்திய ரிசர்வ் பட்டாலியன் கடைநிலை ஊழியர்களில் சமையல்காரர்களாக கடந்த 17 ஆண்டுகளாக பணி செய்து வருகிறோம்.மாநிலத்தில் பிற துறைகளில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு எல்.டி.சி., போன்ற பதவி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது.இதேபோல காவல்துறையில் கடைநிலை ஊழியர்களுக்கு காவலராக பதவி உயர்வு, சம்பள உயர்வு வழங்கப்படுகிறது.இந்திய ரிசர்வ் பட்டாலியனில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களாக பணியாற்றுபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. எனவே, எங்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X