கிரைம் செய்திகள்

Added : அக் 04, 2021
Share
Advertisement
உண்டியல் உடைத்து திருடியவர் கைதுசிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை நகர், மீனாட்சி அம்மன் நகரில் உள்ள குபேர விநாயகர் கோவிலில் கடந்த 30ம் தேதி இரவு பூஜை முடித்து அர்ச்சகர் செல்வராஜூ பூட்டி சென்றார். மறுநாள் காலை வந்த போது கோவில் கேட் பூட்டு உடைத்து, உண்டியலில் பணம் திருடப்பட்டிருந்தது. அண்ணாலைநகர் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வந்தனர். கோவில் பூட்டை உடைத்து

உண்டியல் உடைத்து திருடியவர் கைது
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை நகர், மீனாட்சி அம்மன் நகரில் உள்ள குபேர விநாயகர் கோவிலில் கடந்த 30ம் தேதி இரவு பூஜை முடித்து அர்ச்சகர் செல்வராஜூ பூட்டி சென்றார். மறுநாள் காலை வந்த போது கோவில் கேட் பூட்டு உடைத்து, உண்டியலில் பணம் திருடப்பட்டிருந்தது. அண்ணாலைநகர் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வந்தனர். கோவில் பூட்டை உடைத்து திருடிய சிதம்பரம் நாகச்சேரி குளம் பகுதியைச் சேர்ந்த மோகன், 40; என்பவரை கைது செய்து ரூ. 1100 கைப்பற்றினர்.

கணவர் தற்கொலை
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த மேல்வளையமாதேவி மேலத்தெருவைச் சேர்ந்த வீரமணி, 38; டி.வி., மெக்கானிக். திருமணமாகி 6 ஆண்டுகளாகிறது. குழந்தைகள் இல்லை. இரு தினங்களுக்கு முன் குடித்து விட்டு வந்து மனைவி அன்பரசியிடம் தகராறு செய்தார். மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றார்.இதனால் மனமுடைந்த வீரமணி நேற்று முன்தினம் வீட்டில் புடவையால் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

மணல் கடத்திய ஆட்டோ பறிமுதல்

வேப்பூர்: வேப்பூர் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார், நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதிகாலை 5:00 மணியளவில், சேலம் - கடலுார் சாலையில், வேப்பூர் அடுத்த என்.நாரையூர் பஸ் நிறுத்தம் அருகே வந்த ஆட்டோவை நிறுத்தினர். போலீசாரை பார்த்த ஆட்டோ டிரைவர் தப்பி ஓடினார். சோதனையில் ஆட்டோ பின்புறத்தில் 20 மணல் மூட்டைகள் கடத்தி வந்தது தெரிந்தது. வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து, ஆட்டோவை பறிமுதல் செய்து தப்பி ஓடிய ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.

வாலிபரை தாக்கிய இருவர் மீது வழக்கு

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு நைனாப்பேட்டையை சேர்ந்தவர் குமரன்,30; நடுவீரப்பட்டு அண்ணாநகரை சேர்ந்தவர் புகழ்,25; இருவருக்கும் முன் விரோதம் இருந்தது. நேற்று மதியம் நைனாப்பேட்டை காமன்கோவில்அருகில் நின்றிருந்த குமரனை, புகழ் மற்றும் சஞ்சீவீராயன்கோவில் தெருவை சேர்ந்த பரத்குமார்,20; சேர்ந்து தாக்கினர். பலத்த காயமடைந்த அவர் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின்பேரில் புகழ், பரத்குமார் மீது நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X