பொது செய்தி

இந்தியா

இந்திரா, ராஜிவ் ரவுண்டானாவால் தொடரும் போக்குவரத்து நெரிசல்

Added : அக் 04, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி, இ.சி.ஆரில் அதிகரித்து வரும் போக்கு வரத்து நெரிசலுக்கு தீர்வு காண, இந்திரா மற்றும் ராஜிவ் சிக்னல்களில் ரவுண்டானா சுற்றளவை குறைக்க வேண்டும்.புதுச்சேரியில் போக்கு வரத்து முக்கியத்துவம் வாய்ந்தவை இந்திரா மற்றும் ராஜிவ் சிக்னல். விழுப்புரம், கடலுார், திண்டிவனம், சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வரும் வாகனங்கள், இந்த இரு சிக்னல்களை கடந்தே
 இந்திரா, ராஜிவ் ரவுண்டானாவால் தொடரும் போக்குவரத்து நெரிசல்

புதுச்சேரி : புதுச்சேரி, இ.சி.ஆரில் அதிகரித்து வரும் போக்கு வரத்து நெரிசலுக்கு தீர்வு காண, இந்திரா மற்றும் ராஜிவ் சிக்னல்களில் ரவுண்டானா சுற்றளவை குறைக்க வேண்டும்.

புதுச்சேரியில் போக்கு வரத்து முக்கியத்துவம் வாய்ந்தவை இந்திரா மற்றும் ராஜிவ் சிக்னல். விழுப்புரம், கடலுார், திண்டிவனம், சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வரும் வாகனங்கள், இந்த இரு சிக்னல்களை கடந்தே செல்ல வேண்டும்.இந்திரா சிக்னலில் 4 பிரதான சாலைகள் சந்திப் பதுடன், நான்கு புறத்திலும் பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கி விடுகின்றனர்.

இந்த சிக்னல் நடுவில் இந்திரா சிலையும், அதை சுற்றி 12 அடி சுற்றளவில், நீரூற்றுடன் கூடிய ரவுண்டானா உள்ளது.ராஜிவ் சிக்னலில் வழுதாவூர் சாலை, காமராஜர் சாலை, இ.சி.ஆர்., நுாறடி சாலை, கோரிமேடு என 5 சாலைகள் சந்திக்கின்றன.இந்த சிக்னல் நடுவில் ராஜிவ் சிலையும், அதை சுற்றி 10 அடி சுற்றளவில் சிறிய பூங்காவுடன், ரவுண்டானா உள்ளது.மெகா சைஸில் உள்ள இவ்விரு ரவுண்டானாக்களால், சிக்னலை கடக்கும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். ஒரு திசையில் இருந்து, மற்றொரு திசைக்கு வாகனங்கள் கடந்து செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்துக்கள் நடப்பதும் தொடர் கதையாக உள்ளது. தினசரி ஏராளமானோர் காயமடைந்து வருகின்றனர்.இரண்டு ரவுண்டானாக்களிலும் ஒளி பிரதிபலிப்பான்கள் பொருத்தப்படவில்லை. சிக்னலில் மின் விளக்குகளும் எரிவ தில்லை. இரவு 10:00 மணிக்கு பிறகு சிக்னல்கள் நிறுத்தப்பட்டு விடுகிறது.அதன்பிறகு, ரவுண்டானா இருப்பது தெரியாமல், வாகனங்கள் மோதி விபத்தில் சிக்குவது தொடர் கதையாக உள்ளது.கட்சி தலைவர்கள் பிறந்த நாள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின்போது, சிக்னல் ரவுண்டானாவை சுற்றிலும் பேனர்கள் கட்டி வைக்கின்றனர்

.ஏற்கனவே, அதிக சுற்றளவுள்ள ரவுண்டானாவால் தடுமாறும் வாகனங்கள், பேனர்களால் எதிர் திசையில் வரும் வாகனங்கள் தெரியாமல் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றன.பகலில் போக்குவரத்து நெரிசலையும், இரவில் தொடர்ச்சியாக விபத்துக்களையும் ஏற்படுத்தி வரும் ரவுண்டானாவின் சுற்றளவை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X