பட்டாசு கடைகளில் ஆர்.டி.ஓ., ஆய்வு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பட்டாசு கடைகளில் ஆர்.டி.ஓ., ஆய்வு 

Added : அக் 04, 2021
Share
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பில் வெடிக்கடைகளில் ஆர்.டி.ஓ., (பொறுப்பு) உதயக்குமார் ஆய்வு செய்தார்.சேத்தியாத்தோப்பில் தீபாவளி பண்டிகைக்காக புதிதாக திறக்கப்பட்டுள்ள வெடிக்கடைகள், வெடி குடோன்களில் நேற்று சிதம்பரம் ஆர்.டி.ஓ., (பொறுப்பு) உதயக்குமார் ஆய்வு செய்தார். வெடிக்கடைகளில் தீத்தடுப்பு சாதனங்கள், எளிதில் தீப்பற்றாதவாறு கடைகள் அமைக்கப்பட்டுள்ளதா, மணல்
 பட்டாசு கடைகளில்  ஆர்.டி.ஓ., ஆய்வு 

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பில் வெடிக்கடைகளில் ஆர்.டி.ஓ., (பொறுப்பு) உதயக்குமார் ஆய்வு செய்தார்.

சேத்தியாத்தோப்பில் தீபாவளி பண்டிகைக்காக புதிதாக திறக்கப்பட்டுள்ள வெடிக்கடைகள், வெடி குடோன்களில் நேற்று சிதம்பரம் ஆர்.டி.ஓ., (பொறுப்பு) உதயக்குமார் ஆய்வு செய்தார். வெடிக்கடைகளில் தீத்தடுப்பு சாதனங்கள், எளிதில் தீப்பற்றாதவாறு கடைகள் அமைக்கப்பட்டுள்ளதா, மணல் வாளிகள், தீயணைப்பு சாதனங்கள் உள்ளதா, சரியான முறையில் உரிமம் பெறப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார். சேத்தியாத்தோப்பு வருவாய் ஆய்வாளர் ஜான்பிரிட்டோ, வி.ஏ.ஓ., ஜெயநிலா, கிராம நிர்வாக உதவியாளர் அன்பரசு உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X