கொரோனாவுக்கு ஒருவர் பலி

Added : அக் 04, 2021
Share
Advertisement
புதுச்சேரி : கொரோனா தொற்று பாதிப்பால் காரைக்காலில் ஒருவர் உயிரிழந்தார். புதிதாக 32 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் 4,237 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.103 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். 606 பேர் லேசான அறிகுறியுடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்

புதுச்சேரி : கொரோனா தொற்று பாதிப்பால் காரைக்காலில் ஒருவர் உயிரிழந்தார். புதிதாக 32 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் 4,237 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.103 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். 606 பேர் லேசான அறிகுறியுடன் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 1,26,545 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 89 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதுவரை 1,23,995 பேர் குணமடைந்துள்ளனர்.காரைக்கால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, 49 வயது ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுவரை புதுச்சேரியில் 1443 பேர், காரைக்காலில் 248, ஏனாமில் 106, மாகியில் 44 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X