சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலுக்கு சென்ற 5 மீனவர்கள் மாயம்

Added : ஜூலை 31, 2011 | கருத்துகள் (1)
Share
Advertisement
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு சென்ற ஐந்து மீனவர்கள் கரை திரும்பவில்லை. ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 600க்கும் மேற்பட்ட படகில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இலங்கை கடற்படையின் தீவிர ரோந்துப்பணியால், மீன்பாடு உள்ள பகுதிக்கு செல்லாமல், மீன்வரத்து குறைந்த நிலையில், காலையில் படகுகள் கரை திரும்பியது. இந்நிலையில், ராமேஸ்வரம் மீனவர் பால்ராஜ்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு சென்ற ஐந்து மீனவர்கள் கரை திரும்பவில்லை. ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 600க்கும் மேற்பட்ட படகில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இலங்கை கடற்படையின் தீவிர ரோந்துப்பணியால், மீன்பாடு உள்ள பகுதிக்கு செல்லாமல், மீன்வரத்து குறைந்த நிலையில், காலையில் படகுகள் கரை திரும்பியது. இந்நிலையில், ராமேஸ்வரம் மீனவர் பால்ராஜ் என்பவரது படகு மட்டும் கரை திரும்பவில்லை. மாலை வரை படகில் சென்ற செல்லத்துரை, குமரவேல், அரசுப்பாண்டி உட்பட ஐந்து மீனவர்களும் திரும்பி வராததால், அவர்களின் உறவினர்கள் பதட்டமடைந்துள்ளனர். அவர்கள் மீன்துறை அதிகாரிகளின் அனுமதியுடன் காணாமல் போன மீனவர்களை தேடி, வேறு படகில் கடலுக்கு சென்றனர். இதனிடையே காணாமல் போன மீனவர்களின் படகு மணல் திட்டுகளுக்கு இடையில் பழுதாகி நிற்பதாக கிடைத்த தகவலின்படி, தனுஷ்கோடி அரிச்சல் முனை ஐந்தாம் மணல் திட்டுப்பகுதிக்கு தேடி சென்றுள்ளனர்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ayathuray Rajasingam - Scarborough ,கனடா
31-ஜூலை-201118:47:03 IST Report Abuse
Ayathuray Rajasingam சுருங்கக்கூறில் இந்திய கடற்படையினரின் இயலாத தன்மை அல்லது மத்திய அரசின் பாராமுகத்தை காட்டுகிறது. தமிழக மீனவர்களும் இந்திய பிரஜைகள் என்பதை இவர்கள் உணர்ந்திருப்பார்களானால், இதுவரை இலங்கை கடற்படை அட்டகாசங்களின்றி அமைதியாகவே இருந்திருக்கும். மத்திய அரசும் ஊழல்களை மறைப்பதற்காக, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அரசுக்கு பங்கம் ஏற்படும் வகையிலும் நடந்துகொண்டிருக்கலாம். தமிழக மீனவர்கள் ஏனைய மாநில மீனவர்களுடன் இணைந்து, எல்லா மாநில அரசுகளும் சேர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மொத்தத்தில் இந்திய மக்களே இந்த பிரச்சினைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X