பொது செய்தி

தமிழ்நாடு

சாலையோர ஆக்கிரமிப்புகளால் வாகன விபத்துக்கள் அதிகரிப்பு

Added : அக் 04, 2021
Share
Advertisement
மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் கடை வீதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் வாகன விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. கடலுார் - சேலம் நெடுஞ்சாலையில் மந்தாரக்குப்பம் வழியாக திருச்சி, சேலம், மதுரை, கோயம்புத்துார் உட்பட பல பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. குறவன்குப்பம் முதல் ரோமாபுரி வரை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்ட பின் கடைவீதிகளில் ஆக்கிரமிப்புகளால்

மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் கடை வீதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் வாகன விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.

கடலுார் - சேலம் நெடுஞ்சாலையில் மந்தாரக்குப்பம் வழியாக திருச்சி, சேலம், மதுரை, கோயம்புத்துார் உட்பட பல பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. குறவன்குப்பம் முதல் ரோமாபுரி வரை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்ட பின் கடைவீதிகளில் ஆக்கிரமிப்புகளால் சாலை மிகவும் குறுகலாகி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடைவீதிக்கு வரும் வாகன ஓட்டிகள் சாலையில் வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். சாலையோரம் நிறுத்தப்படும் தள்ளு வண்டி கடைகளும், கடை வைத்துள்ளவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் வாகன விபத்துக்கள் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. மந்தாரக்குப்பம் கடை வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X