பொது செய்தி

இந்தியா

முதியோர், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு போட... அனுமதி நகராட்சி, பஞ்சாயத்து விதிகளில் திருத்தம்

Added : அக் 04, 2021
Share
Advertisement
புதுச்சேரி : சட்டசபை தேர்தலை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலிலும் முதியோர், மாற்றுத்திறனாளிகள், கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவு

புதுச்சேரி : சட்டசபை தேர்தலை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலிலும் முதியோர், மாற்றுத்திறனாளிகள், கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.அதன் ஒரு பகுதியாக, 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டு போட இயலாத சூழ்நிலையில், அவர்கள் வீடுகளில் இருந்து ஓட்டளிக்கும் முறையை அமல்படுத்தியது.இந்நிலையில், தற்போது நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும், மேற்கூறிய நபர்கள் வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு போடும் முறையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, புதுச்சேரி நகராட்சி, பஞ்சாயத்து விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.அதன்படி, 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள், கொரோனா வால் தனிமைப்படுத்தப் பட்டவர்கள், தபால் ஓட்டு போட 13-சி படிவம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.முதலில், ஒவ்வொரு வார்டு வாரியாக 80 வயதுக்கு மேற்பட்ட முதி யோர், மாற்றுத்திறனாளிகள், கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்படும்.பின்னர், அவர்களிடம் பெயர், முகவரி, மொபைல் எண் அடங்கிய தபால் ஓட்டு குறித்த விருப்ப படிவம், பூத் லெவல் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் பூர்த்தி செய்து, பெறப்படும்.ஓட்டுப் பதிவுக்கு முன்பாக ஒரு குறிப்பிட்ட தேதியில், தேர்தல் அலுவலர்கள் அடங்கிய குழு அவர்களின் வீடுகளுக்கே சென்று, ஓட்டுப்பதிவு செய்து, தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைப்பர்.

இத்தகைய ஓட்டுப்பதிவுகளை முறையாக மேற்கொள்ள சிறப்பு வாகனமும் ஏற்பாடு செய்யப்படும்.ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு மைக்ரோ அப்சர்வர், இரண்டு தேர்தல் அதிகாரிகள், ஒரு வீடியோகிராபர் மற்றும் காவல்துறையை சேர்ந்த ஒருவரும் பணியில் இருப்பர்.இதன் மூலம், உள்ளாட்சி தேர்தலிலும் 80 வயதிற்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள், கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் சிரமம் இல்லாமல் ஓட்டு போட முடியும்.தேர்தலின்போது சட்டம் ஒழுங்கு நிலையை பராமரிக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிலர் கைது செய்யப்படுவது வழக்கம்.

இவ்வாறு கைது செய்யப்படுவோருக்கு, உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுரிமை வழங்கிட விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.தபால் ஓட்டுகளுக்கான குழுக்கள், வாகனங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X