பொது செய்தி

இந்தியா

சைபர் கிரைம் போலீஸ் பெயரில் பணம் பறிக்கும் கும்பல்

Added : அக் 04, 2021
Share
Advertisement
புதுச்சேரி : 'வாட்ஸ் ஆப்' குழுவில் இணைந்து, ஆபாச படம் பார்க்கும் நபர்களிடம் சைபர் கிரைம் போலீசார் பெயரில் பணம் பறிப்பது, புதுச்சேரியில் அதிகரித்து வருகிறது.நாட்டில் குழந்தைகள் மீதான பாலியல் தொந்தரவு அதிகரித்துள்ளதை தொடர்ந்து, அனைத்து மாநிலங்களிலும், இணையதளம் வாயிலாக ஆபாச படம் பார்ப்பவர்களை போலீசார் ரகசியமாக கண்காணித்து, நடவடிக்கை எடுத்து

புதுச்சேரி : 'வாட்ஸ் ஆப்' குழுவில் இணைந்து, ஆபாச படம் பார்க்கும் நபர்களிடம் சைபர் கிரைம் போலீசார் பெயரில் பணம் பறிப்பது, புதுச்சேரியில் அதிகரித்து வருகிறது.

நாட்டில் குழந்தைகள் மீதான பாலியல் தொந்தரவு அதிகரித்துள்ளதை தொடர்ந்து, அனைத்து மாநிலங்களிலும், இணையதளம் வாயிலாக ஆபாச படம் பார்ப்பவர்களை போலீசார் ரகசியமாக கண்காணித்து, நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.போலீசாருக்கு டிமிக்கி கொடுக்கும் வகையில், 'வாட்ஸ் ஆப்' குழுக்களை ஏற்படுத்தி, குழு 'அட் மின்'கள் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர். அதன் வாயிலாக, குழுவில் உள்ளவர்கள் ஆபாச படங்களை பார்த்து வருகின்றனர்.புதுச்சேரியில் சமீபகாலமாக இப்படிப்பட்ட 'வாட்ஸ் ஆப்' குழுக்கள், நகரங்கள் மட்டுமின்றி, கிராமங்களிலும் அதிகரித்து வருகிறது.

இப்படி 'வாட்ஸ் ஆப்'பில் ஆபாச படங்களை பார்த்து மூழ்கி கிடக்கும் இளைஞர்களை குறி வைத்து, நுாதன மோசடி அரங்கேறி வருகிறது. இந்த மோசடி, 'சைபர் கிரைம்' போலீசார் பெயரில் நடத்தப்படுகிறது.ஆபாச படங்களை பார்க்கும் இளைஞர்களின் மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள், 'சைபர் கிரைம் போலீசில் இருந்து பேசுகிறோம், நீங்கள் வாட்ஸ் ஆப்பில் ஆபாச காட்சியை டவுன்லோடு செய்து பார்த்துள்ளீர்கள்.அவ்வாறு செய்வது குற்றம் என அரசு அறிவித்த பிறகும் பார்த்ததால் கைது செய்ய உங்கள் வீட்டிற்கு வருகிறோம்.

உங்களுடைய பெற்றோரிடம் மொபைல் போனை கொடுங்கள்' என மிரட்டும் வகையில் பேசுகின்றனர்.இதை கேட்டு பதறும் இளைஞர்கள், வீட்டிற்கு வர வேண்டாம். பெற்றோருக்கு தெரிந்தால் அசிங்கமாகி விடும். இனிமேல் இப்படி செய்ய மாட்டேன்' என கெஞ்சுகின்றனர்.அதையடுத்து, கைது செய்யாமல் இருக்க, 1,500 ரூபாயை இணையவழியிலோ, அல்லது வங்கிக் கணக்கிற்கு செலுத்துமாறு கூறி, பெற்றுக் கொள்கின்றனர்.

அடுத்த சில நிமிடங்களில், வேறு ஒரு நபர் சைபர் கிரைம் போலீஸ் என்று கூறிக்கொண்டு, ' நாங்களும் தான் உன்னை கைது செய்ய வந்தோம். எங்களுக்கும் பணம் அனுப்பு' என மிரட்டுகிறார். 1,500 ரூபாயை இணைய வழியாக பறித்துக் கொள்கிறார்.இவ்வாறு சைபர் கிரைம் போலீசாரின் பெயரில் பணம் பறிப்பது, புதுச்சேரியில் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இணையவழியில் ஏதேதோ காரணம் கூறி, மோசடி பேர்வழிகள் பணம் பறிப்பது வழக்கம். தற்போது சைபர் கிரைம் போலீஸ் பெயரிலேயே மோசடி பேர்வழிகள் பணம் பறிக்க துவங்கியுள்ளனர்.இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X