பொது செய்தி

தமிழ்நாடு

நெரிசலை குறைக்க காளவாசல் சந்திப்பில் சிக்னல் மாற்றியமைப்பு

Added : அக் 04, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை காளவாசல்சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்க இன்று(அக்.,4) முதல் சிக்னல் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.இச்சந்திப்பில் பழங்காநத்தம் மற்றும் ஆரப்பாளையம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் சிக்னலில் காத்திருப்பதை தவிர்க்க இப்பாலம் கட்டப்பட்டது. ஆனால் பெரும்பாலான வாகனங்கள் பாலத்தை பயன்படுத்தாமல் கீழ்ப்பகுதியில் வழக்கம் போல் சிக்னலில் காத்திருந்து

மதுரை : மதுரை காளவாசல்சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்க இன்று(அக்.,4) முதல் சிக்னல் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.

இச்சந்திப்பில் பழங்காநத்தம் மற்றும் ஆரப்பாளையம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் சிக்னலில் காத்திருப்பதை தவிர்க்க இப்பாலம் கட்டப்பட்டது. ஆனால் பெரும்பாலான வாகனங்கள் பாலத்தை பயன்படுத்தாமல் கீழ்ப்பகுதியில் வழக்கம் போல் சிக்னலில் காத்திருந்து நேராக செல்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது.

இதை தவிர்க்க, இன்று முதல் சிக்னல் மாற்றியமைக்கப்படுகிறது. பழங்காநத்தம், ஆரப்பாளையம் பகுதியில் இருந்து வாகனங்கள் காளவாசல் சந்திப்பில் இருந்து அரசரடி, தேனி ரோட்டிற்கு திரும்பலாம். நேராக செல்ல முடியாது. பாலத்தில்தான் செல்ல வேண்டும். இதனால் காளவாசல் சந்திப்பில் இருந்த பஸ் ஸ்டாப் சொக்கலிங்க நகருக்கும், குரு தியேட்டர்பகுதிக்கும் மாற்றப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X