பொது செய்தி

தமிழ்நாடு

அரசின் நான்காம் கட்ட மெகா முகாமில் 17 லட்சம் பேருக்கு தடுப்பூசி

Updated : அக் 04, 2021 | Added : அக் 04, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை-மாநிலம் முழுதும் நேற்று நடந்த நான்காவது மெகா தடுப்பூசி முகாமில், 17 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், மூன்றாம் அலை பாதிப்பை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆர்வம்ஆரம்பத்தில் தயங்கிய மக்கள், தற்போது தடுப்பூசி போட மிகுந்த ஆர்வம் காட்டி

சென்னை-மாநிலம் முழுதும் நேற்று நடந்த நான்காவது மெகா தடுப்பூசி முகாமில், 17 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.latest tamil news


தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், மூன்றாம் அலை பாதிப்பை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆர்வம்ஆரம்பத்தில் தயங்கிய மக்கள், தற்போது தடுப்பூசி போட மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதையடுத்து, மெகா தடுப்பூசி முகாம்களை அரசு அடுத்தடுத்து நடத்தி வருகிறது. செப்., 12ல் நடந்த முதலாவது முகாமில், 28.91 லட்சம்; செப்., 19ல் நடந்த இரண்டாம் முகாமில், 16.43 லட்சம்; செப்., 26ல் நடந்த மூன்றாவது முகாமில், 24.85 லட்சம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

இதையடுத்து, நான்காவது மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. சென்னையில் 1,600 இடங்கள் உட்பட மாநிலம் முழுதும், 24 ஆயிரத்து 760 இடங்களில் முகாம் நடந்தது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி மாவட்டங்களில் நடந்த முகாமை ஆய்வு செய்தார். சென்னையில் ஓமந்துாரார் அரசு மருத்துவ கல்லுாரி; திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்த தடுப்பூசி முகாமை, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்.

பின் அவர் அளித்த பேட்டி:இரண்டு மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனாவால் இறந்தவர்களில், 90 சதவீதம் பேர் தடுப்பூசி போடாதவர்கள். இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களில், 3.5 சதவீதம்; முதல் தவணை மட்டும் போட்டவர்களில், 7.4 சதவீதம் பேரின் இறப்பு பதிவாகியுள்ளது. முதியோரில் 42 சதவீதம் பேர் மட்டுமே, முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர்.


latest tamil news


எனவே, வீடு தேடிச் சென்று தடுப்பூசி போட, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.புதிய வைரஸ்தமிழக மரபணு பகுப்பாய்வு கூடத்தில், இதுவரை மேற்கொண்ட ஆய்வில், டெல்டா வகை கொரோனா வைரஸ் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது; புதிய வைரஸ் ஏதும் கண்டறியப்படவில்லை. நேற்று நடந்த நான்காவது தடுப்பூசி முகாம் வெற்றிகரமாக நடந்துள்ளது; 17 லட்சத்து 19 ஆயிரத்து 544 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Madurai,இந்தியா
04-அக்-202115:20:36 IST Report Abuse
Kumar இனிமே கூட்டம் குறையத்தான் செய்யும். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
Jhanaarthanan - Bbangalore,இந்தியா
04-அக்-202112:26:14 IST Report Abuse
Jhanaarthanan Sep12th I put my 2nd dose Covishield vaccination, but still I didn't received message and Certification. Govt need to take care this as well.
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
04-அக்-202108:50:15 IST Report Abuse
Duruvesan ஒன்றிய அரசு வூசி குடுக்கலைனு சொன்னான், ஓ செங்கல்பட்டு வூசி, ஸ்டாலின் வாழ்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X