பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி முகாம்: கலெக்டர் பார்வை

Added : அக் 04, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் நேற்று நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் பாலசுப்ரமணியம் பார்வையிட்டார். கடலுார் பெருநகராட்சி பகுதிகளான மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் கலை, அறிவியல் கல்லுாரி, வண்டிப்பாளையம் அரசு மேல்நிலைபள்ளி ஆகிய இடங்களில்நேற்று நடந்த கொரோனாதடுப்பூசி போடும் பணியை கலெக்டர் பாலசுப்ரமணியம் பார்வையிட்டார்.பின்னர் அவர் கூறுகையில், மாவட்டத்தில்
 தடுப்பூசி முகாம்: கலெக்டர் பார்வை

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் நேற்று நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் பாலசுப்ரமணியம் பார்வையிட்டார். கடலுார் பெருநகராட்சி பகுதிகளான மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் கலை, அறிவியல் கல்லுாரி, வண்டிப்பாளையம் அரசு மேல்நிலைபள்ளி ஆகிய இடங்களில்நேற்று நடந்த கொரோனாதடுப்பூசி போடும் பணியை கலெக்டர் பாலசுப்ரமணியம் பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறுகையில், மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி 88 ஆயிரத்து 190 பேர், 19ம் தேதி 55 ஆயிரத்து 92 பேர், 29ம் தேதி 1லட்சத்து 15ஆயிரத்து 590 பேருக்கு இது வரை மூன்று கட்டங்களாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நான்காவது முறையாக இன்று (நேற்று) அனைத்து ஊராட்சி அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், தாசில்தார், பேரூராட்சி அலுவலகங்கள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி மற்றும் கல்லுாரி வளாகங்கள், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் 739 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இம்முகாமில் மருத்துவத் துறையினரோடு அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து சிறப்பாக நடந்து வருகிறது, என்றார். துணை இயக்குநர் மீரா, தாசில்தார் பலராமன், நகராட்சி கமிஷனர் மகேஸ்வரி, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். நேற்றைய முகாமில் ௯௧ ஆயிரத்து, ௫௯௧ பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X