பொது செய்தி

இந்தியா

மதுக்கடை மீது தாக்குதல்

Added : அக் 04, 2021
Share
Advertisement
வில்லியனுார் : வில்லியனுாரில் சேதமடைந்த பீர் பாட்டிலை மாற்றி கொடுக்காததால், மதுபானக் கடை மீது தாக்குதல் நடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.வில்லியனுார், பத்துக்கண்ணு சாலையில் புதுச்சேரி கிருஷ்ணா நகரை சேர்ந்த ரமேசுக்கு சொந்தமான மதுபானக் கடை உள்ளது.இங்கு நேற்று மாலை 6.30 மணியளவில் இருவர் டின் பீர் வாங்கிச் சென்றனர். அதில் ஒன்று சேதமடைந்து இருப்பதாக கூறி, வேறு பீர்

வில்லியனுார் : வில்லியனுாரில் சேதமடைந்த பீர் பாட்டிலை மாற்றி கொடுக்காததால், மதுபானக் கடை மீது தாக்குதல் நடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.

வில்லியனுார், பத்துக்கண்ணு சாலையில் புதுச்சேரி கிருஷ்ணா நகரை சேர்ந்த ரமேசுக்கு சொந்தமான மதுபானக் கடை உள்ளது.இங்கு நேற்று மாலை 6.30 மணியளவில் இருவர் டின் பீர் வாங்கிச் சென்றனர். அதில் ஒன்று சேதமடைந்து இருப்பதாக கூறி, வேறு பீர் பாட்டில் கேட்டனர்.கடை ஊழியர் கொடுக்க மறுத்தார். ஆத்திரமடைந்த இருவரும் கடை மீது கற்களை வீசி தாக்கியதுடன், ஊழியர்களையும் மிரட்டினர்.பயந்துபோன ஊழியர்கள் பீர் பாட்டிலை மாற்றி கொடுத்தனர். அதனை தொடர்ந்து இருவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்த சி.சி.டி.வி., பதிவை மதுபானக் கடை ஊழியர்கள் வெளியிட்டனர். ஆடியோ இல்லாமல் அந்த வீடியோ வெளியானதும், பாரில் மாமூல் கேட்டு பிரச்னை செய்வதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.மதுக்கடை கேஷியர் மோகன், வில்லியனுார் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.தாக்குதலில் ஈடுபட்ட, வில்லியனுார் மூர்த்தி நகரைச் சேர்ந்த ரஞ்சித் (22), பிரபா (23) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X