பள்ளி, கல்லுாரி செய்திகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி, கல்லுாரி செய்திகள்

Added : அக் 04, 2021
Share
வன விலங்குகள் வார விழாமதுரை லேடி டோக் கல்லுாரி விலங்கியல் துறை சார்பில் வன விலங்குகள் வாரம் கொண்டாடப்பட்டது. துறை தலைவர் பிரியதர்ஷினி வரவேற்றார். இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் பிரவின்குமார் பேசினார். ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்றனர்.முன்னாள் மாணவர்கள் சந்திப்புமதுரை அமெரிக்கன் கல்லுாரியில் 2004 இளங்கலை வணிகவியல் பயின்றவர்கள்

வன விலங்குகள் வார விழா

மதுரை லேடி டோக் கல்லுாரி விலங்கியல் துறை சார்பில் வன விலங்குகள் வாரம் கொண்டாடப்பட்டது. துறை தலைவர் பிரியதர்ஷினி வரவேற்றார். இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் பிரவின்குமார் பேசினார். ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்றனர்.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் 2004 இளங்கலை வணிகவியல் பயின்றவர்கள் சந்திப்பு நடந்தது. அவர்கள் படித்த வகுப்பறையில் நடந்த சந்திப்புக்கு முன்னாள் மாணவர் சங்க தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். கல்லுாரி கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் சந்திப்பது என்றும், குடும்ப உறுப்பினர்களுடன் பங்கேற்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

மரக்கன்றுகள் நடும் விழா

மதுரை திருஞானம் பள்ளி, காந்தி மியூசியம் மற்றும் செசி உதவியுடன் செயல்படும் அமைதி சங்கம் சார்பில் கடவூரில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் சரவணன் மரக்கன்றுகளை அப்பகுதியினருக்கு வழங்கி நட்டு வைத்தார். சங்க உறுப்பினர்கள் கொரோனா தடுப்பு ஊசி செலுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். செசி நாடக பயிற்றுனர் ரவி, கடவூர் கிளை தலைவர் சவுந்தர்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X