தமிழ்நாடு

மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை 15 சதவீதம். கூடுதல் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை 443 மி.மீ., பதிவு

Added : அக் 04, 2021
Share
Advertisement
கடலுார் : தென்மேற்கு பருவமழை காலத்தில் கடலுார் மாவட்டத்தில் இயல்பைவிட 15 சதவீதம் மழை கூடுதலாக பெய்துள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை சராசரியாக 443. 58 மி.மீ., மழை பெய்துள்ளது.கடலுார் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 1,206 மி.மீ., மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை மாவட்டத்தில் குறைந்த அளவே மழை பெய்யும். தொடர்ந்து ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்,

கடலுார் : தென்மேற்கு பருவமழை காலத்தில் கடலுார் மாவட்டத்தில் இயல்பைவிட 15 சதவீதம் மழை கூடுதலாக பெய்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை சராசரியாக 443. 58 மி.மீ., மழை பெய்துள்ளது.கடலுார் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 1,206 மி.மீ., மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை மாவட்டத்தில் குறைந்த அளவே மழை பெய்யும். தொடர்ந்து ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிக மழை பெய்வது வழக்கம். ஆனால், இந்தாண்டு ஜனவரி மாதத்தில் இருந்தே சராசரி அளவைவிட அதிக மழை பெய்து வருகிறது. கடந்த, ஜன., மாதம் சராசரியாக 27.9 மி.மீ., மழை பெய்ய வேண்டும். ஆனால், 10 மடங்கு அதிகமாக 273.58 மி.மீ., மழை பெய்தது. பிப்., மாதம் சராசரி மழையான 16.2 மி.மீ., மழைக்கு பதில் கூடுதலாக 68.50 மி.மீ., பெய்தது. மார்ச் மாதம் சராசரியான 14.6 மி.மீ.,க்கு பதில் 0.26 மி.மீ., மழையும், ஏப்., மாதம் 17 மி.மீ.,க்கு பதில் 4.90 மி.மீ., என மிக குறைந்த அளவு மழை பெய்துள்ளது. அதே சமயத்தில் மே மாதம் சராசரி அளவான 50.10 மி.மீ.,க்கு பதில் 64.64 மி.மீ., மழை, ஜூன் மாதம் 47.3 மி.மீ.,க்கு பதில் 52.88 மி.மீ., மழை, ஜூலை மாதம் 75.1 மி.மீ.,க்கு பதில் 123.69 மி.மீ., என, கூடுதல் மழை பெய்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 129.2 மி.மீ.,க்கு குறைவாக 117.14 மி.மீ., மழையும், செப்டம்பர் மாதம் 131.5 மி.மீ.,க்கு பதில் 149.87 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இதில், தென்மேற்கு பருவ மழை காலமான ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை சராசரியாக 383.10 மி.மீ., மழை பெய்ய வேண்டும்.

ஆனால், 15 சதவீதம் கூடுதலாக 443.58 மி.மீ., மழை பெய்துள்ளது. அதே போல், மொத்தத்தில் இந்தாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை 9 மாதங்களில் சராசரியாக 508.9 மி.மீ., மழை பெய்ய வேண்டும். 855.46 மி.மீ., என, கூடுதல் மழை பதிவாகியுள்ளது. இதனால், மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.குப்பநத்தத்தில் 63.4 மி.மீ., மழைகடலுார் மாவட்டத்தில் பரவலான மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8.30 மணி வரை பெய்த மழையின் அளவு; குப்பநத்தம் 63.4 மி.மீ., மழை, வேப்பூர் 62, காட்டுமயிலுார் 57, மேமாத்துார் 54, விருத்தாசலம் 42, ஸ்ரீமுஷ்ணம் 35.2, காட்டுமன்னார்கோவில் 28, பெலாந்துறை 24.2, லால்பேட்டை 24, குறிஞ்சிப்பாடி 23, வடகுத்து 22, கீழ்ச்செருவாய் 21, வானமாதேவி 18.6, தொழுதுார் 17, கொத்தவாச்சேரி 14, புவனகிரி 13, லக்கூர் 11, சேத்தியாத்தோப்பு 10.6, கடலுார் 9.4, கலெக்டர் அலுவலகம் 8.6, சிதம்பரம் 8, அண்ணாமலை நகர் 7.8, பண்ருட்டி 7.2, எஸ்ஆர்சி குடிதாங்கி 7.2, பரங்கிப்பேட்டை 1.4 மி.மீ., மழை பதிவாகியது.

மாவட்டத்தில் மொத்தம் 589.60 மி.மீ., மழை பதிவானது. சராசரி மழை 23.58 மி.மீ., ஆகும்.மின்தடை: நேற்று முன் தினம் இரவு 12.30 மணிக்கு மேல் பெய்த மழையில் மஞ்சக்குப்பம் ரூரல் பீடரில் மின் தடை ஏற்பட்டது. இதனால் பெரியகங்கணாங்குப்பம், உச்சிமேடு, நாணமேடு, தியாகுநகர், சுபஉப்பலவாடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டது. கொசுத் தொல்லையால் இரவு துாங்கமுடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். தொடர்ந்து 8 மணி நேரத்திற்கு பிறகு பழுது நீக்கி மின்சாரம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X