பொது செய்தி

தமிழ்நாடு

குறிச்சி கண்மாயிலிருந்து உபரி நீர் வெளியேற்றம்

Added : அக் 04, 2021
Share
Advertisement
மேலுார் : மேலுார் அருகே கள்ளந்திரி முதல் குறிச்சிப்பட்டி வரை பெரியாறு, வைகை ஒரு போக பாசன பகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் உள்ளன.இதில் கடைமடையான குறிச்சிப்பட்டி குறிச்சி கண்மாய் நிரம்பியதும் வெளியேறும் உபரி நீர் சிவகங்கை மாவட்டம் ஆதினிப்பட்டி செல்லும். பல ஆண்டுகளாக வறட்சி நிலவியதால் குறிச்சி கண்மாயில் இருந்து உபரி நீர் வெளியேறும் பகுதியை

மேலுார் : மேலுார் அருகே கள்ளந்திரி முதல் குறிச்சிப்பட்டி வரை பெரியாறு, வைகை ஒரு போக பாசன பகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் உள்ளன.

இதில் கடைமடையான குறிச்சிப்பட்டி குறிச்சி கண்மாய் நிரம்பியதும் வெளியேறும் உபரி நீர் சிவகங்கை மாவட்டம் ஆதினிப்பட்டி செல்லும். பல ஆண்டுகளாக வறட்சி நிலவியதால் குறிச்சி கண்மாயில் இருந்து உபரி நீர் வெளியேறும் பகுதியை விவசாயிகள் இரண்டரை அடிஉயரத்திற்கு மணல் மூடைகளை அடுக்கி தடுத்திருந்தனர்.

தற்போது அனைத்து கண்மாய்களும் நிரம்பி வருவதால் தாசில்தார்இளமுருகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பவளகண்ணன் தலைமையில் ஊழியர்கள் மணல் மூடைகளை அகற்றினர். அதையடுத்து ஆதினிப்பட்டிக்கு உபரி நீர் சென்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X