பொது செய்தி

தமிழ்நாடு

படைப்புழுவை கட்டுப்படுத்த வழி

Added : அக் 04, 2021
Share
Advertisement
மதுரை : ''டி.கல்லுப்பட்டி வட்டாரத்தில் பயிரிட்டுள்ள மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் அறிகுறி காணப்படுகிறது. 'மெட்டாரைசியம் அனிசோபிளே' உயிரியல் மருந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்,'' என, வேளாண்மை உதவி இயக்குனர் விமலா தெரிவித்துள்ளார்.இதற்கான தீர்வு குறித்து அவர் கூறியதாவது: முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் இலைகளின் அடிப்பகுதியில் சுரண்டி இரவு

மதுரை : ''டி.கல்லுப்பட்டி வட்டாரத்தில் பயிரிட்டுள்ள மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் அறிகுறி காணப்படுகிறது. 'மெட்டாரைசியம் அனிசோபிளே' உயிரியல் மருந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்,'' என, வேளாண்மை உதவி இயக்குனர் விமலா தெரிவித்துள்ளார்.

இதற்கான தீர்வு குறித்து அவர் கூறியதாவது: முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் இலைகளின் அடிப்பகுதியில் சுரண்டி இரவு நேரத்தில் அதிக சேதத்தை உண்டு பண்ணும். எனவே அதிகளவு தழைச்சத்து இடுவதை தவிர்க்க வேண்டும். ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட பூச்சிகொல்லி மருந்தில் விதைநேர்த்தி செய்து விதைத்திருந்தால் ஆரம்ப கட்ட பாதிப்பை தவிர்க்கலாம்.

விதைப்பின் போது வயலைச் சுற்றி வரப்போரம் தட்டைப்பயறு, எள், சூரியகாந்தி, துவரை தீவனச்சோளம் ஏதாவது ஒன்றை பயிர் செய்யலாம்.விதைப்பிற்குப் பின் ஒரு ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சி பொறியை வைத்து ஆண் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.

விதைத்த 15--20 நாட்களுக்குள் ஏக்கருக்கு அசாடிராக்டின் 15000 பி.பி.எம் ஒரு லிட்டர் தெளிக்கலாம். 40--45 நாட்களில் மெட்டாரைசியம் அனிசோபிளே என்ற உயிரியல் பூஞ்சாண மருந்தை ஏக்கருக்கு ஒரு கிலோ கைத்தெளிப்பான் மூலம் செடியின் குருத்துப்பகுதியில் படும்படி தெளித்தும் கட்டுப்படுத்தலாம். மெட்டாரைசியம் அனிசோபிளே உயிர் பூஞ்சாண மருந்து கிலோ ரூ.135க்கு வேளாண்மை விரிவாக்க மையங்களில் கிடைக்கிறது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X