பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி - சின்னசேலம் ரயில்வே திட்டப் பணிகள் துவங்க முயற்சிப்போம்: பா.ஜ., துணைத் தலைவர்

Added : அக் 04, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம் - கள்ளக்குறிச்சி ரயில்வே திட்டப் பணிகளை மேற்கொள்ள முயற்சி செய்வோம் என பா.ஜ., துணைத் தலைவர் துரைசாமி தெரிவித்தார்.கள்ளக்குறிச்சி, பா.ஜ., அலுவலகத்தில் நிருபர்களிடம் அவர் கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.,வின் வேட்பாளர்கள் ஒன்றிய கவுன்சிலர் 35 பேர், மாவட்ட கவுன்சிலர் 8 பேர் என தனித்து


கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம் - கள்ளக்குறிச்சி ரயில்வே திட்டப் பணிகளை மேற்கொள்ள முயற்சி செய்வோம் என பா.ஜ., துணைத் தலைவர் துரைசாமி தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி, பா.ஜ., அலுவலகத்தில் நிருபர்களிடம் அவர் கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.,வின் வேட்பாளர்கள் ஒன்றிய கவுன்சிலர் 35 பேர், மாவட்ட கவுன்சிலர் 8 பேர் என தனித்து நிற்கிறோம். மோடியின் சாதனைகள் எந்த அளவிற்கு மக்களிடம் போய் சேர்ந்துள்ளது என்பதை அறிந்திடவே நாங்கள் இங்கு தனித்து போட்டியிடுகிறோம்.மற்ற 145 இடங்களில் அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாகவே நாங்கள் பணி செய்கிறோம்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரதமர் மோடியால் கொண்டு வரப்பட்டுள்ள மருத்துவக் கல்லுாரி இந்த ஆண்டு முதல் துவங்கியுள்ளது. மத்திய அரசு மூலம் சின்னசேலம் - கள்ளக்குறிச்சி ரயில் திட்ட பணிகளை, மாநிலத் தலைவர் மூலமாக அமைச்சரிடம் பேசி உடனடியாக கொண்டு வர முயற்சிப்போம்.

அதேபோல், சேலம் - உளுந்துார்பேட்டை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில், பைபாஸ் பகுதிகளில் உள்ள இரட்டை வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றிடவும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை இங்கு கொண்டு வருவதற்கான பணிகளை நாங்கள் உடனடியாக செய்து தர முயற்சி செய்வோம்' என்றார்.மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி, பா.ஜ., மாநில செயலாளர் ஸ்ரீதர், சேலம் மாவட்ட பார்வையாளர் கோபிநாத், கள்ளக்குறிச்சி மாவட்ட பார்வையாளர் தடா பெரியசாமி, மாநில துணைத்தலைவர் சிறுபான்மை பிரிவு அசோக்குமார், மாவட்ட தலைவர் பாலசுந்தரம் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X