போலீஸ் செய்திகள்...

Added : அக் 04, 2021
Share
Advertisement
லாரி மோதி பெண் பலிமதுரை: தேனுார் பாண்டி மனைவி கருப்பாயி 43. 2 பேரும் கட்டட தொழிலாளர்கள். நேற்று காலை இருவரும் வேலைக்கு டூவீலரில் ஊமச்சிக்குளம் - கடச்சனேந்தல் ரோட்டில் சென்றபோது அவ்வழியில் நாய் குறுக்கிட்டது. பாண்டி பிரேக் போட பின்னால் வந்த லாரி மோதியதில் கருப்பாயி இறந்தார். பாண்டி காயமுற்றார். போலீசார் விசாரிக்கின்றனர்.டெய்லர் தற்கொலைபேரையூர்: சாப்டூர் வாசிமலை 34.

லாரி மோதி பெண் பலி

மதுரை: தேனுார் பாண்டி மனைவி கருப்பாயி 43. 2 பேரும் கட்டட தொழிலாளர்கள். நேற்று காலை இருவரும் வேலைக்கு டூவீலரில் ஊமச்சிக்குளம் - கடச்சனேந்தல் ரோட்டில் சென்றபோது அவ்வழியில் நாய் குறுக்கிட்டது. பாண்டி பிரேக் போட பின்னால் வந்த லாரி மோதியதில் கருப்பாயி இறந்தார். பாண்டி காயமுற்றார். போலீசார் விசாரிக்கின்றனர்.

டெய்லர் தற்கொலை

பேரையூர்: சாப்டூர் வாசிமலை 34. டெய்லரான இவர் குடும்ப பிரச்னையால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.புகையிலை விற்றவர் கைதுபேரையூர்: சிலைமலைபட்டி இருளப்பன் 34, பெட்டிக்கடை வைத்துள்ளார். இக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலையை விற்றதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். நுாற்றுக்கணக்கான புகையிலை பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது.

வாகனம் மோதி முதியவர் பலி

கொட்டாம்பட்டி : பள்ளபட்டி நான்கு வழிச்சாலையில் நேற்று முன் தினம் மதியம் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் இறந்தார். வி.ஏ.ஒ., ஆறுமுகம் புகாரின்படி போலீசார் விசாரிக்கின்றனர்.

புகையிலை: ஒருவர் கைது

கொட்டாம்பட்டி: கருங்காலக்குடியில் எஸ்.பி., பாஸ்கரனின் தனிப்படை போலீசார் ரோந்து சென்ற போது தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்த சண்முகராஜை 27, கைது செய்து 1696 பாக்கெட்டுகள், ரூ.13 ஆயிரம் மற்றும் ஒரு டூவீலரை பறிமுதல் செய்தனர்.

கார்-லாரி மோதல்: டிரைவர் பலி

உசிலம்பட்டி: பி.எம்.டி., கல்லுாரி அருகே நேற்று மாலை தேனியில் இருந்து மதுரை சென்ற காரும், மதுரையில் இருந்து கேரளா சென்ற லாரியும் மோதிக்கொண்டன. இதில் கார் டிரைவர் அலங்காநல்லுார் சதாம் உசேன் 21, பலியானார். காரில் வந்த திவ்யா, லாரி டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X