பொது செய்தி

தமிழ்நாடு

நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி வகுப்பு

Added : அக் 04, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : உள்ளாட்சித் தேர்தலை யொட்டி கள்ளக்குறிச்சியில் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.மாவட்டத்தில் வரும் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் படி ஓட்டுப்பதிவு நடைபெறுவதை கண்காணிக்க 134 பேர் நுண் பார்வையாளர்களாக

கள்ளக்குறிச்சி : உள்ளாட்சித் தேர்தலை யொட்டி கள்ளக்குறிச்சியில் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.மாவட்டத்தில் வரும் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது.

மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் படி ஓட்டுப்பதிவு நடைபெறுவதை கண்காணிக்க 134 பேர் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கான பயிற்சி வகுப்பு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. தேர்தல் பொது பார்வையாளர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார்.பயிற்சியில் தேர்தலின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள், பொறுப்புகள், ஓட்டுப் பெட்டிகளை தயார்படுத்துதல் மற்றும் தேர்தல் பார்வையாளர்களுக்கு அளிக்க வேண்டிய அறிக்கைகள் குறித்து பயிற்சி அளித்து, ஆலோசனைகள் வழங்கப்பட்டது.ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் மணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள், பி.டி.ஓ.,க்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X