பொது செய்தி

தமிழ்நாடு

தீபாவளிக்கு பயணிக்க முன்பதிவு அரசு பஸ்களுக்கு இன்று துவக்கம்

Updated : அக் 04, 2021 | Added : அக் 04, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை--தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வோருக்காக, அரசு விரைவு பஸ்களில் இன்று முதல் முன்பதிவு துவங்குகிறது.ஆண்டு தோறும் தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு, சொந்த ஊருக்கு செல்வோருக்காக, அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இந்த ஆண்டில் தீபாவளி பண்டிகை, நாடு முழுதும் நவம்பர், 4ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. வெள்ளியன்று, ஒரு

சென்னை--தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வோருக்காக, அரசு விரைவு பஸ்களில் இன்று முதல் முன்பதிவு துவங்குகிறது.



latest tamil news


ஆண்டு தோறும் தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு, சொந்த ஊருக்கு செல்வோருக்காக, அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இந்த ஆண்டில் தீபாவளி பண்டிகை, நாடு முழுதும் நவம்பர், 4ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. வெள்ளியன்று, ஒரு நாள் கூடுதலாக விடுப்பு எடுத்தால், நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சென்னையில் இருந்து வெளியூர் மற்றும் சொந்த ஊருக்கு செல்வோர், தங்கள் பயணத்திற்கு அரசு பஸ்களில் முன்பதிவு செய்வர். அரசு விரைவு போக்குவரத்து கழகங்களில், ஒரு மாதத்திற்கு முன், முன்பதிவு செய்யலாம். அதன்படி, நவம்பர் 3ல் பயணிப்பதற்கான முன்பதிவு, அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களுக்கு இன்று துவங்குகிறது.


latest tamil news


அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், நாகர்கோவில், திருநெல்வேலி, துாத்துக்குடி உட்பட பல்வேறு நகரங்களுக்கு சொகுசு பஸ்களும், படுக்கை வசதி உடைய பஸ்களும், குளிர்சாதன பஸ்களும் இயக்கப்படுகின்றன.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
04-அக்-202116:47:36 IST Report Abuse
Bhaskaran போனவருசம் போனியாகவில்லை
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
04-அக்-202108:18:48 IST Report Abuse
duruvasar விடியலோ விடியல். மு.க. முத்து நடிச்ச பட டைட்டில் மாதிரி இருக்குன்னு நெனச்சா கம்பனி பொறுப்பல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X