பொது செய்தி

தமிழ்நாடு

சங்கராபுரத்தில் சர்வ சமய பிரார்த்தனை

Added : அக் 04, 2021
Share
Advertisement
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் காந்தி, வள்ளலார் பிறந்த நாள் விழா, கொரோனா நீங்கிட சிறப்பு வழிபாடு மற்றும் திருவாசகம், குர் ஆன், பைபிள் படித்து சர்வசமய பிரார்த்தனை நடந்தது.சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ், ரோட்டரி தேர்வு தலைவர் நடராஜன், முன்னாள் தலைவர்
 சங்கராபுரத்தில் சர்வ சமய பிரார்த்தனை

சங்கராபுரம் : சங்கராபுரத்தில் காந்தி, வள்ளலார் பிறந்த நாள் விழா, கொரோனா நீங்கிட சிறப்பு வழிபாடு மற்றும் திருவாசகம், குர் ஆன், பைபிள் படித்து சர்வசமய பிரார்த்தனை நடந்தது.

சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ், ரோட்டரி தேர்வு தலைவர் நடராஜன், முன்னாள் தலைவர் ரகுநந்தன் முன்னிலை வகித்தனர்.

கல்யாணி முத்துக்கருப்பன் வரவேற்றார்.உலக மக்கள் அனைவரின் நலனுக்காகவும், கொரோனா தாக்கம் குறையவும் சர்வ சமய பிரார்த்தனை நடந்தது. வள்ளலாரும் காந்தியும் என்ற தலைப்பில் கோவை சிவப்பிரகாச சுவாமிகள் பேசினார்.நிகழ்ச்சியில் குசேலன், சங்கைத் தமிழ்ச் சங்கத் தலைவர் சுப்புராயன், படைப்பாளர் சங்கத் தலைவர் செம்பியன், திருக்குறள் பேரவைச் செயலாளர் லட்சுமிபதி, சாதிக், ஜெய் பிரதர்ஸ் நற்பணி மன்ற தலைவர் விஜயகுமார், அரிமா மாவட்ட தலைவர் வேலு, வெங்கடேசன், சுதாகர், ஜம்புலிங்கம், தலைமை ஆசிரியர் செல்வராஜ், இன்னர் வீல் சரவணதேவி உட்பட பலர் பங்கேற்றனர்.சன்மார்க்க இளைஞரணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X