வடபொன்பரப்பி பள்ளிக்கு உபகரணம் வழங்கும் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வடபொன்பரப்பி பள்ளிக்கு உபகரணம் வழங்கும் விழா

Added : அக் 04, 2021
Share
சங்கராபுரம் : சங்கராபுரம் இன்னர் வீல் கிளப் சார்பில் வடபொன்பரப்பி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு பென்ச், டெஸ்க் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.விழாவிற்கு, இன்னர் வீல் கிளப் தலைவி அனிதா தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயலட்சுமி சேகர் முன்னிலை வகித்தார். பொருளாளர் சுபா அசோக்குமார் வரவேற்றார்.இன்னர்வீல் மாவட்ட சேர்மன் தாட்சாயணி, முன்னாள் தலைவி கலாவதி ஆகியோர்
 வடபொன்பரப்பி பள்ளிக்கு உபகரணம் வழங்கும் விழா

சங்கராபுரம் : சங்கராபுரம் இன்னர் வீல் கிளப் சார்பில் வடபொன்பரப்பி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு பென்ச், டெஸ்க் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.விழாவிற்கு, இன்னர் வீல் கிளப் தலைவி அனிதா தலைமை தாங்கினார்.

செயலாளர் ஜெயலட்சுமி சேகர் முன்னிலை வகித்தார். பொருளாளர் சுபா அசோக்குமார் வரவேற்றார்.இன்னர்வீல் மாவட்ட சேர்மன் தாட்சாயணி, முன்னாள் தலைவி கலாவதி ஆகியோர் பள்ளிக்கு 40 செட் பென்ச், டெஸ்க் வழங்கினர்.நிகழ்ச்சியில் இன்னர் வீல் கிளப் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X