பொது செய்தி

தமிழ்நாடு

சின்னசேலம் ஒன்றிய கிராமங்களில் வேட்பாளர்கள் ஓட்டு சேகரிக்கும் பணியில் தீவிரமாக

Added : அக் 04, 2021
Share
Advertisement
சின்னசேலம் : உள்ளாட்சித் தேர்தலையொட்டி, சின்னசேலம் ஒன்றிய கிராமங்களில் வேட்பாளர்கள் ஓட்டு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.சின்னசேலம் ஒன்றியத்தில் 50 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதற்கான உள்ளாட்சி தேர்தல், வரும் 9ம் தேதி நடைபெற உள்ளது. இதில் சின்னசேலம் ஒன்றியத்தில் 2 மாவட்ட கவுன்சிலர், 21 ஒன்றிய கவுன்சிலர், 50 ஊராட்சித் தலைவர் மற்றும் 384 வார்டு உறுப்பினர்

சின்னசேலம் : உள்ளாட்சித் தேர்தலையொட்டி, சின்னசேலம் ஒன்றிய கிராமங்களில் வேட்பாளர்கள் ஓட்டு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சின்னசேலம் ஒன்றியத்தில் 50 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதற்கான உள்ளாட்சி தேர்தல், வரும் 9ம் தேதி நடைபெற உள்ளது. இதில் சின்னசேலம் ஒன்றியத்தில் 2 மாவட்ட கவுன்சிலர், 21 ஒன்றிய கவுன்சிலர், 50 ஊராட்சித் தலைவர் மற்றும் 384 வார்டு உறுப்பினர் இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.இதற்காக தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., - தே.மு.தி.க., உட்பட பல்வேறு கூட்டணி கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் களத்தில் உள்ளனர்.

வேட்பாளர்களுக்கான சின்னங்கள் கடந்த மாதம் 25ம் தேதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதனையடுத்து, வேட்பாளர்கள் கிராமங்களில் ஒவ்வொரு தெருவிற்கும் சென்று தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஒரு சில வேட்பாளர்கள் தாங்கள் பதவிக்கு வந்தால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து நோட்டீஸ் அச்சிட்டு வழங்கி வருகின்றனர். இன்னும் தேர்தலுக்கு நான்கு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், கிராமங்களில் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X